ஞாயிறு, 20 ஜனவரி, 2019

நோர்வே தலைநகர உதவி மேயர் கம்சாயினிக்கு யாழ்ப்பாண ஆதிக்க ஜாதியினர் எதிர்ப்பு ?

யாழ்ப்பாண ஆதிக்க சமூகத்தில் அல்லாத, விளிம்புநிலைச் சமூகத்தில் பிறப்பெடுத்த ஒரு பெண்மணி இவ்வளவு ஆளுமை மிக்க ஒருவராக ஹம்சாயினி திகழ்வார் என்று  எதிர்பார்த்திருக்கவில்லை! ஆகையினால், அவரது வளர்ச்சிப்போக்கில் ஏற்கனவே காழ்ப்புணர்சிகொண்ட இவர்களும், யாழ் “புத்திஜீவிச் சமூகமும்”
கம்சாயினி குணரத்தினம் நோர்வே தலைநகரான ஆஸ்லோ நகர துணை மேயராக உள்ளார் . இவர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். மூன்று வயதில் பெற்றோருடன் புலம் பெயர்ந்து நோர்வே சென்றார்.. இவர் ஒசுலோ பல்கலைக்கழகத்தில் சமூகப் புவியியலில் பட்டம் பெற்றவர். 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நோர்வே தீவிரவாதத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர். இவர் தாக்குதல் நடைபெற்ற தீவில் இருந்து கடலில் நீந்தி வந்து உயிர் தப்பினார்
ஏ.ஜி. யோகராஜா—-theneeweb.ne : அவர்கள் ஆத்திரப்படுவதற்கான சூத்திரம்தான்
என்ன?
ஹம்சாயினியின் இலங்கைப் பிவேசம், அதனைத் தொடர்ந்த சர்ச்சைகள் எல்லாம் ஓயந்தபோதும், அதன் தூவானம் இன்னும் தூறிக்கொண்டேயிருக்கிறது. இப்போது ஹம்சாயினி பேரளவில் அனைவராலும் அறியப்படும் அந்தஸ்த்தைப் பெற்றுவிட்டார். அதேபோல் புலிகள்சார் இளையோர் அமைப்பினால் அரசியலுக்குள் இழுத்துவரப்பட்டவர் அவர் என்பதும் எல்லோரும் அறிந்தாகிவிட்டது.
ஆனால் பலராலும் அறியப்படாத விடயம்; பல்வேறு அவதூறுகளினால் குதறப்பட்ட அவரது நிலைமை: நெருப்பில் துருத்திய தங்கத்தைப் போல் அவரை புடம்போட்டிருக்கிறது. மேலும்,  படிப்பினையுடன் கூடிய ஆளுமை மிக்க அடுத்த தளத்துக்கு அவரை உயர்த்தியிருக்கிறது! இப்போ பிரதிமேயராக மட்டும் இருக்கும் அவர், நோர்வே தேசிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடைவதற்கான அவரது தகுதியை மேலும் உயர்த்தியிருக்கிறது! என்பது.
அவதூறுகளால் குதறித்தள்ளும் அளவுக்கு அவரது நேர்காணலில், உரையாடலில், சந்திப்புகளில் அவர் உதிர்த்த கருத்துக்களின் சாராம்சம்தான் என்ன?
1. புலிகளின் ராஜதந்திர பேச்சுவார்த்தை மேசையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் முன்னிறுத்தியிருக்கலாம்!
2. பெண் குழந்தைகளை சுய ஆளுமை மிக்கவர்களாக வளர்க்க வேண்டும்!
3. இரகசிய கருக்கலைப்பின்போது ஏற்படும் பெண்களின் உயிரிழப்பை தவிர்க்கும் நிமித்தம் கருக்கலைப்பை சட்டரீதியாக்கவேண்டும்!
4. பெண்கள் தமது உடம்புக்கு தாமே தலைவியாக இருக்கவெண்டும் என்ற உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கவேண்டும்!
மேற்படி கருத்துக்களை ஏற்கும் நிலையில் சமூகம் இல்லை; அல்லது வளர்ச்சியடையவில்லை என்றால்; அதனை எப்படி மறுதலித்திருக்கவேண்டும்?
30ஆண்டுகால புலம்பெயர் வாழ்விலும், தவிர்க்கமுடியாதபடி அதன் தொடர்பிலும் உள்ள தமிழ்ச் சாதிக்கு இதுகூடத் தெரியாதா? இல்லை! தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை! அது மட்டுமல்ல ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் இருந்துவந்த வந்த பல பெண்கள், இலக்கிய சந்திப்புகளிலும், பெண்கள் சந்திப்புகளிலும் இத்தகைய கருத்துக்களை முன்வைத்துப் பேசவில்லையா?
அப்போதெல்லாம் நீங்கள் எங்கே சென்றீர்கள்? இதன் அர்த்தம் என்ன? நீங்கள் முன்கூட்டியே தீர்மானித்துவிட்டீர்கள்!
உண்மையில் நடந்ததென்ன?
ஹம்சாயினியின் இயல்பான திறமையின் நிமித்தம் அரசியலுக்குள் பிரவேசித்தார் .…
1. பெண்ணுரிமை குறித்த தேடலில் தமிழர் பண்பாட்டையே கேள்விக்குள்ளாக்கும் ஓரு பெண்ணியவாதியாக கம்சாயினி மிளிர்வார் என்றோ,
2. அதன் நிமித்தம் (அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு) சுயமான கோட்பாட்டின் அடிப்படையில் அவர் இயங்குவார் என்றோ,
3. இதன் கோலங்களை தாய் மண்ணிலும் வரைவார் என்றோ,
4. நோர்வே மக்கள் சமூத்துடன் சரிக்குச் சமனான திறனுடன் மேலெழுவார் என்றோ,
5. அதுவும் யாழ்ப்பாண ஆதிக்க சமூகத்தில் அல்லாத, விளிம்புநிலைச் சமூகத்தில் பிறப்பெடுத்த ஒரு பெண்மணி இவ்வளவு ஆளுமை மிக்க     ஒருவராக ஹம்சாயினி திகழ்வார் என்றோ இவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை!
ஆகையினால், அவரது வளர்ச்சிப்போக்கில் ஏற்கனவே காழ்ப்புணர்சிகொண்ட இவர்களும், யாழ் “புத்திஜீவிச் சமூகமும்” , உதயன் பத்திரிகையும் “வாயிலிருந்து விழும் வீணியை லபக்கென்று கவ்வத்துடிக்கும் நாய்க்குட்டியைப் போல, வார்தைப் பிரயோகங்களில் ஏற்படும் பிழைகளை சாட்டாக வைத்து அவதூறுகளால் குதறித் தள்ளுவதென்ற“  முன்முடிவின் அடிப்படையிலேயே அவர்மீது தகாத வார்த்தைகளைப் பொழிந்தனர்!

மேலும், அவரது அரசியல் பிரவேசம்; அவருக்கான அவரது உள்ளக ஆற்றலை, ஆணுக்கும் பெண்ணுக்குமான சமநீதியைக் கோரும் பெண்ணிய நிலைப்பாட்டை நிலைப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான உந்துசக்தியாக, ஊக்கியாக அமைந்துவிட்டது.  அவரது உள ஆதங்கத்தின் அடிப்படையிலும், தம்மை அரசியலில் நிலை நிறுத்துவதற்கும், உலகமே இவரை திரும்பிப் பார்க்கவைப்பதற்குமான   கண்ணியாக  இதனை  (ஆணுக்கும் பெண்ணுக்குமான சமநீதியைக் கோரும் பெண்ணிய நிலைப்பாட்டை) எடுத்துக்கொண்டமை அவரது வயதை மீறிய ராஜதந்திரம்.

ஓப்பீட்டளவில்; புலிகளுக்கிடையில் சாதிய சமத்துவமும், ராணுவரீதியில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான சமத்துவமும் பேணப்பட்டன என்பதை மறுத்துவிட முடியாது.
இவை எல்லாமே யுத்தத்துக்கான தேவையின் நிமித்தம்; சமூகத்தின் மீதான ஒருவித அழுத்தத்தின் மீது கட்டமைக்கப்பட்டவையாகவே கருத இடமுண்டு. அவர்களது சட்ட வரைவிலும், கொடிப் பாடலிலும் சாதிய சமத்துவத்துக்கான வரிகளைக் கொண்டிருந்தபோதும் சமூக விடுதலையை நோக்காகக்கொண்ட கருத்தியலை சமூகத்திடம் பரப்புரை செய்யும் வகையிலோ,  கோட்பாட்டு உருவாக்கத்தின் அடிப்படையிலோ கட்டமைக்கப்பட்டன என்று கூறிவிட முடியாது! என்பதனால்தான்; யுத்தம் முடிந்த மறுதினமே இவை எல்லாம் (சாதிய மேலாண்மை, பெண்ணொடுக்குமுறை) மீளெழுச்சி பெறத்தொடங்கிவிட்டன!
இதன் தாக்கம் இன்று சமூகத்தில் பூதாகரமாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக முன்னாள் போராளிப் பெண்கள் அவலவாழ்வை தரிசிக்கும் வகையில் புறக்கணிப்புகளுக்கும் அவமானங்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.
பாவம் கம்சி!
தாய்த் தேசம் புறவயமாக, புதிய புதிய கல் வீடுகளாலும் காப்பற் வீதிகளாலும் மதிற் சுவர்களாலும் நிரம்பி வழிந்தபோதும், அகவயப்பட்ட மனித உள்ளங்கள் இன்னும் கிடுகுவேலிக்குள் இருந்து வெளிவரவில்லை என்பதை அறிந்திருக்கவில்லை கம்சாயினி!
thenee.com

கருத்துகள் இல்லை: