vikatan.com அ.சையது அபுதாஹிர்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை
ஆணையத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர் ஆஜராகி சாட்சியம்
அளித்துள்ளார். அவர் அளித்த சாட்சியத்தில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான
பல்வேறு விவரங்களைப் பதிவு செய்துள்ளதாக ஆணையத்தின் தரப்பில்
சொல்லப்படுகிறது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஆரம்பித்து ஓர் ஆண்டைக் கடந்துவிட்டது. அந்த ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரணை நடத்தியுள்ளார்கள். அரசுத் தரப்பில் பலரும் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். ஆனால், அமைச்சர்கள் தரப்பில் இதுவரை ஆணையத்தில் யாரும் ஆஜராகவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பி பல காரணங்களால் அப்போது ஆஜராகமுடியாத நிலை இருந்தது.
இந்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் ஆணையத்தின் வழக்கறிஞர் ஜபருல்லாகான் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளார்கள். இந்த விசாரணையில் விஜயபாஸ்கர் கூறிய தகவல்கள் இதுதான் என்கிறார்கள்.
``அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு உயரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அது மறுப்பதற்கில்லை. ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அப்போலோ தரப்பில் ஏதும் சொல்லப்படவில்லை. அதே நேரம் இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா? என்றால், விவாதிக்கப்படவில்லை. காரணம் அதுகுறித்து எந்த அஜெண்டாவும் அமைச்சரவையில் வைக்கப்படவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் தலைமைச் செயலாளருக்கு உண்டு. அவரின் ஏற்பாட்டில்தான் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
ஜெயலிலதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து எல்லா விவரங்களும் ஓ.பி.எஸ்ஸுக்குத் தெரியும். எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே, நாங்கள் வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்லவேண்டிய அவசியம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். ஜெயலலிதாவுக்கு டிரக்கஸ்டோமி சிகிச்சை அளிக்க அவர் அனுமதிக்கப்பட்ட அறையிலிருந்து அவரை வெளியே அழைத்துச் செல்லும்போது விஜயபாஸ்கர், பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களுக்குத் தெரியும் என்று அப்போலோ மருத்துவர்கள் சொல்லியது குறித்து விஜயபாஸ்கரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஆம்! என்று பதில் சொல்லியுள்ளார்.
அதேபோல் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டால் முதல் விசாரணையே விஜயபாஸ்கரிடம் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தாரே தெரியுமா? என்று கேட்கப்பட்டதற்கு ஆம் என்று சொல்லியுள்ளார். மேலும், அது தொடர்பான தொடர்கேள்விகளை சசிகலா தரப்பில் வைக்கப்பட்டதற்கு நான் இதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்று சொல்லியுள்ளார் விஜயபாஸ்கர். ``ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு இல்லை என்று விஜயபாஸ்கர் பதில் அளித்திருப்பதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்துார் பாண்டியன் சொல்லியுள்ளார் .
செவ்வாய்க் கிழமை அன்று துணை சபாநாயகர் தம்பிதுரையும், புதன்கிழமை அன்று துணைமுதல்வர் பன்னீர் செல்வமும் ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார்கள். பன்னீர் செல்வத்தின் சாட்சியம் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகி்றது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக