வெள்ளி, 9 நவம்பர், 2018

திருக்குறளை திரிக்க முயலும் ஆங்கில நூல்.. நாகசாமியின் நச்சு புத்தகம் .. கொழுத்தப்பட வேண்டும் .. சுபவீ .


இலங்கநாதன் குகநாதன் : திருக்குறளை திரிக்க முயலும் ஒரு ஆங்கில நூல் - ` Tirukkural - An Abridgement of Shaastras ` :::
Image may contain: 1 person, standing👉நாகசாமி என்பவர் Tirukkural - An Abridgement of Shaastras என்றொரு (புத்தகத்தினை) புரட்டினை எழுதியுள்ளார். அதில் மனுதர்மம் முதலிய சமசுகிரத நூல்களின் பிழிவிலிருந்தே (சாரம்சம்) திருக்குறள் தோன்றியதாக வழமையான பார்ப்பன புரட்டினை கூறியுள்ளார். மனுதர்மம் காலத்தால் திருக்குறளிற்குப் பிற்பட்டது என்று ஏற்கனவே அறிஞர்களால் சான்றுபடுத்தப்பட்டதனை அவர் கவனத்திற்கொள்ளவில்லை. நூலின் தலைப்பிலும், நூல் முழுவதுமே திருக்குறள் வடமொழி சாத்திரங்களின் வழிவந்ததே என அழுத்திக் கூறும் இவர், ஒரிடத்தில் மட்டும் இது எதிர்கால ஆய்விற்குரியது என்கின்றார்.
👉திருக்குறள் மீது பார்ப்பனர்களின் ஒவ்வாமை வரலாறு அறிந்ததே. “தீக் குறளை சென்று ஓதோம்” (கோள் சொல்லுதல் கூடாது) என்ற ஆண்டாள் பாடலிற்கு “திருக்குறளை ஓதவேண்டாம்” என வலியப் பொய் சொன்ன மூத்த சங்கரச்சாரியார் முதல் “முதல் பத்து குறள்களை மட்டுமே பயன்படுத்தலாம்” என்று சொன்ன செயேந்திர சங்கரச்சாரியார் ஈடாக இன்றைய நாகசாமியின் இப் புத்தகம் வரை இந்த தமிழ் வெறுப்பினைக் காணலாம். இப் புத்தகத்தின் பொய்மையினை உடைக்க சங்கரச்சாரியார் விரும்பும் முதல் பத்து குறள்களிலேயே சில குறள்களை முதலில் நாமும் அவர் விருப்பப்படி எடுத்துக்கொள்வோம்.

👉மனுநீதி முதலான பார்ப்பனிய சாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வர்ணாச்சிரம கோட்பாடே ஆகும். ரிக்வேத புருச சூத்திரத்தின் 10 வது சுலோகமான பிரம்மனின் படைப்புக் கோட்பாடே (படம் 2) சாத்திரங்களின் அடிப்படை. இதன்படி சூத்திரன் காலிலிருந்தே பிறந்தவர்கள் எனக் கூறி தமிழர்களை இழிவுபடுத்துகின்றது ரிக்வேதம். இக் கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. இப்போது முதல் பத்து குறள்களில் (பின்நாளில் கடவுள் வாழ்த்தாக்கப்பட்ட) குறள்களில் 7 குறள்களை எடுத்து, அதற்கு முனைவர் மறைமலை இலக்குவனார் கொடுத்த விளக்கங்களையே துணையாகக் கொள்ளப்போகின்றேன். இங்கு நீங்கள் கவனிக்கவேண்டிய விடயம் பின்வரும் 7 குறள்களிலும் காலின் பெருமையினைப் பேசியே வள்ளுவன் ரிக்வேத புருச சூத்திரத்திற்குப் பதிலடி கொடுக்கின்றார். ( இது பற்றி விரைவில் இலக்குவனாரின் ஒரு நூல் வெளிவரவுள்ளது).
👇• “கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்” (குறள் 2)
{தூய அறிவுடைய ஆசிரியரின் #தாளை – (காலை)வணங்காவிட்டால் கற்றதனால் பயன் ஒன்றும் இல்லை என்கிறார்.}
👇• “மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்” (குறள் 3 )
{திருவள்ளுவர். மாண்பு உடையவர்களின் – சிறப்பு உடையவர்களின் – #அடிகளைப் பொருந்தி வாழ்பவர்களே நீடு வாழ்பவர்களாம் எனவே தலையில் பிறந்ததாக ஆணவம் கொள்ளாமல் காலை வணங்க வேண்டும்}
👇• “வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார்க் கு
யாண்டு மிடும்பை மில” (குறள் 4)
{துன்பம் இல்லாது வாழ என்ன செய்ய வேண்டும் என்கிறார்? விருப்பு வெறுப்புடன் எதையும் – யாரையும் பார்க்காத – அணுகாத கண்ணோட்டம் உடைய விருப்பு வெறுப்பு அற்றவர்களின் அடியை ( #பாதம்)வணங்க வேண்டும்}
👇• “தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது”. (குறள் 7)
{மனத்துன்பத்தை யாரால் போக்க முடியும்? ஒப்பு நோக்குவதற்கு இணையற்ற ஆற்றோர் #திருவடிகளைப் பற்றினால் அன்றி மனக்கவலைகளை மாற்ற இயலாது எனத் திருவள்ளுவர்}
👇* “அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது” (குறள் (8)
{பொருட்கடலிலும் இன்பக்கடலிலும் திளைக்க வேண்டும் என்றால் அழகிய பண்புநலன்கள் உடைய அறவோர்களின் தாள் ( #கால் ) பணிதல் வேண்டும் என்கிறார்} (அந்தணர் = அறவோர், பார்ப்பனரல்ல)
தலையில் பிறந்ததால் உயர்வு என்போரை அடிசாய்க்கும் வகையில் திருவள்ளுவர் மற்றொரு கருத்தைக் கூறுகிறார். என்னவென்று?
👇• “கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை” . (குறள் 9)
{எண்ணிப் போற்றும் குணம் உடையவனின் தாளை வணங்காத #தலை_ பயன்_அற்றது }
👇• “பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்
Image may contain: 1 person, meme and textஇறைவ னடிசேரா தார்”. (குறள் 10)
{நல்ல பண்புகளை உறைவிடமாகக் கொண்டவர்கள் – கல்விச் செல்வம் தங்கியிருப்பவர்கள் – அதிகார ஆளுமை தங்கியிருப்பவர்கள் ஆகிய இறைமையாளர்களின் அல்லது இறைவனின் அடி( #foot ) சேர்ந்தவர்களால் மட்டும் அவர்கள் வழிகாட்டுதலில் துன்பக்கடலைக் கடக்கமுடியும்}.
👆👆பார்த்தீர்களா வள்ளுவன் எவ்வாறு முதல் அதிகாரத்திலேயே ரிக்வேத புருச சூத்திர படைப்புக்கோட்பாட்டினை காலின் பெருமை பேசி தகர்த்து எறிந்துள்ளார் என்று. இவை எல்லாவற்றிற்றிற்கும் முத்தாய்ப்பாக அமைந்த குறள் வருமாறு
👇"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”. (குறள் 972)
`எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே` என மேற்குறித்த குறளில் வர்ணாச்சிரமக் கோட்பாட்டினையே தகர்த்து எறிகின்றார்.
👇“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று” (குறள் 259) என்ற குறளின் மூலம் பார்ப்பனச் சடங்கான வேள்வியினையே (யாகம்) ஏளனம் செய்கின்றார் வள்ளுவன்.
👇“மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்” (குறள் 134) என்ற குறள் வேறு #பார்ப்பனர் என்ற சொல்லையே பயன்படுத்திச் சாடுகின்றார் வள்ளுவர்.
👉இவ்வாறு குறள்களை அடுக்கிக்கொண்டே போகலாம், விரிவஞ்சி நிறுத்துகின்றேன். இத்தகைய முழுவதும் பார்ப்பன-ஆரிய எதிர்ப்பாக அமைந்த திருக்குறளை `ஆரிய சாத்திரங்களின் சாரம்` என நூல் எழுதுபவர்களை என்ன சொல்லுவது!

கருத்துகள் இல்லை: