ஞாயிறு, 4 நவம்பர், 2018

போக்குவரத்து தொழிலாளர்கள் ஏன் போராடுகிறார்கள்? அவர்களின் பென்ஷன் மருத்துவ காப்பீடு எல்லாம் பிடுங்கிய தமிழக அரசு

· போக்குவரத்து தொழிலாளர்கள் ஏன்
போராடுகிறார்கள் என்று பாருங்கள்?
அவர்கள் பென்ஷன், மருத்துவக்காப்பீடு என எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டு, பேருந்தை கூட முறையாக பராமரிக்காமல் கேவலமாக நிர்வாகம் நடத்தும் இந்த அரசின் அவலம். இராமநாதபுரம் to கொம்புதி (பஸ் நம்பர் :11) நாள் : 2.11.2018

vinavu :போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தீவிரமாக நடைபெறுகிறது. ஊடகங்கள் மத்தியில் இந்த வேலை நிறுத்தம் பொது மக்களுக்கான பாதிப்பு என்ற கோணத்தில் மட்டும் விவாதிக்கப்படுகிறது. அன்றாடம் இலட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்யும் அந்த தொழிலாளிகளின் நியாயம் என்ன என்பதைக் கூட இங்கே  பேசுவதற்கும் ஆதரிப்பதற்கும் அதிகம் பேர் இல்லை! இங்கே ஃபேஸ்புக்கில் போக்குவரத்து தொழிலாளிகள் தெரிவித்திருக்கும் கருத்துக்களை தொகுத்து தருகிறோம்.

Bharathi Nathan
சமீபத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் மன உளைச்சல் காரணமாக இதய நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாய், பேருந்து ஓட்டுநர்கள் இரவும் பகலும் ஓய்வின்றி பணியில் ஈடுபட்டு வருவதால், பேருந்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சு வலியால் துடிதுடித்து மரணமடைந்திருக்கறார்கள். அத்தகைய ஓட்டுநர்கள் உயிர் போகும் நிலையிலும் கூட, தன்னை நம்பி பேருந்தில் அமர்ந்துள்ள பொதுமக்களை காப்பாற்றும் விதமாய் சமாளித்து வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு செத்திருக்கிறார்கள். அவர்களின் உரிமைகளுக்காக போராடும் போது ஆதரவாக நிற்பது நம் கடமை.
இது சிற்சில சிரமங்களை வைத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஒரு சிலர் கவனத்துக்கு.
Rajagopal Sevafoundation Theni
போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் ! *எங்களை பற்றியும் சிந்தித்த மக்களுக்காக நான் பேருந்தை இயக்க தயார்..*
நண்பர் ஒருவர் அனுப்பியது…
பொதுமக்களுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் அடியேனின் அன்பான காலை வணக்கம்…
இன்று போக்குவரத்து தொழிலாளர்களான ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்…ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள்..
நீங்கள் நினைப்பது போல் போக்குவரத்து அடிநிலை தொழிலாளர்களான ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அரசை சார்ந்த ஊழியர்களே தவிர அரசு ஊழியர்கள் அல்ல..
சிலர் நினைக்கலாம் அரசுதான் அத்தனை சலுகைகளும் அரசு ஊழியர்களுக்கு செய்கிறதே அப்புறம் என்ன என்று… இரட்டை டம்ளர் முறை சம்பளம்…அதிகாரிகளுக்கு ஏனைய அரசு ஊழியர்களை போன்று சம்பளம்.. அவர்களால் அடிமை படுத்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இல்லை..
லஞ்சம் வாங்காமல் பியூஸ் போடும் ஒரு eb wire man உட்பட லஞ்சமாக பணம் கொடுத்தால்தான் மக்களுக்கு தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்வோம் என சொல்லும் எத்தனை எத்தனை அரசு ஊழியர்கள்..
அனுபவித்த உங்களுக்கு தெரியும்…
இரவு பகல் பாராமல் மலை வெயில் பாராமல் நேரத்திற்கு உண்ணாமல் மக்களுக்காக ஒரு ராணுவ வீரனுக்கு நிகராக உழைப்பவர்கள் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மட்டுமே…
தொழிலார்களில் பலர் *அதிக பணிச்சுமை நீண்ட நேர கண் விழித்திருத்தல் நேரத்திற்கு பசிக்கு சாப்பிடாமல் இருந்து எத்தனையோ நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எத்தனை எத்தனை*…
*மக்களின் உயிரை காப்பதில் கடவுளுக்கு நிகரானவர்கள்..எத்தனையோ ஊழியர்கள் தான் குடும்ப பொங்கல் தீபாவளி போன்ற விழாக்காலங்களில் வீட்டை மறந்து பொது மக்களின் கனவுகளை சுமந்து செல்பவர்களாக இருக்கிறார்கள்..இவர்களின் கனவுகளோ வாழ்க்கை பாதியிலே முடிந்து விடுகிறது*…
விலை வாசி உயர்வுக்கேற்ற சம்பளம் இல்லை..பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை..வயதுக்கு வந்தவர்களை திருமணம் முடித்து வைக்க பணம் இல்லை..
*காரணம் செட்டில்மெண்ட் இல்லை..அதற்குள் எமனிடம் செட்டில் ஆகிவிடுகிறார்கள்*…
*வருமானத்திற்கு மேல் கையூட்டு பெரும் ஒரே காரணத்தால் அரசு அல்லது அரசு சார்ந்த ஊழியர்களில் இவர்களை தவிர அனைவரும் நல்லதான் இருக்கிறார்கள்*..
மற்ற எந்த அரசு துறை ஊழியரையாவது மாலை 6 மணிக்கு மேல் பணியாற்ற சொல்லுங்கள் பார்க்கலாம்…
இரவு பகல் பாராமல் உழைக்கும் இவர்களின் வாழ்க்கை பற்றின வாழ்வாதாரம் தான் கேள்விக்குறியாகி விட்டது…
*உழைப்பு அதிகம் ஊதியம் குறைவு*
*ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காகவும்,விவசாயிகள்,நெடுவாசல்,NEET போன்ற மக்கள் பிரட்சனைகளுக்காக பேருந்தை நிறுத்தி முதல் குரல் கொடுத்த இவர்களுக்காக மக்களில் ஒருவனான நான் எனது முதல் ஆதரவை தெரிவிக்கிறேன்…*
*அரசு அல்லது அரசு சார்ந்த ஊழியர்களில் 20 மணிநேரத்திற்க்கு மேல் உழைத்தும் லஞ்சம் பெறாத ஊழியர்கள் இருப்பார்கள் என்றால் அது அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மட்டுமே*..
மக்களே சிந்திப்பீர்!
ஆ.சேவியர் காரைக்குடி
தொழிலாள தோழமைகளே..
உசார்….. உசார்…..
நாம் தற்ப்போது பெற்றுவரும் ஊதியம் அரசு ஊழியர்களுக்கு இணையான அல்ல….
நாம் தற்ப்போது பெற்றுவரும் ஊதியம் மின் வாரிய ஊழியர்களுக்கு இணையானது அல்ல…
அரசு ஊழியர்களும் , மின் வாரிய ஊழியர்களும் நம்மை விட 40 சதம் கூடுதலாக ஊதியம் பெற்று வருகின்றனர் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே…
தற்ப்போது நம்மை விட 40 சதம் கூடுதலாக ஊதியம் பெறுவோர்களுக்கு காரணி 2.57 என்று கணக்கீட்டு புதிய ஊதியம் பெற்று வரும் நிலையில், அவர்களை விட குறைவான ஊதியம் பெறும் நமக்கு மட்டும் 2.44 காரணி கொண்டு கணக்கிட்டாலே, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாகி விடுவீர்கள் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அனைத்து கிளைகளிலும் ஆளும் கட்சி சார்ந்த சங்கத்தினர் சுற்றி வருகின்றனர்.
இங்கு நமக்கு 2.57 கொடுக்க முடியாது என்பவர்கள் (அரசு) நாளை மின்வாரிய ஊழியர்களுக்கு காரணி 2.57 வழங்க உள்ளார்கள்.
தொழிலாள தோழமைகளே..
உசார்….. உசார்…..
நமக்கு வீட்டு வாடகைப்படி , சலவைப்படி, நகர ஈட்டுப்படி போன்றவைகளில் கூடுதலாக பணப்பலன் கிடைப்பதை காட்டிலும் ஊதிய உயர்வு ஆனது அடிப்படை சம்பளத்தில் கூடுதலாக பெற வேண்டும். அதுவே சிறப்பு..
அப்படியானால் நாம் பார்க்கும் பணி சுமைக்கும், பணி சூழலுக்கும், பணி பாதுகாப்பு இன்மைக்கும் ஏற்ற ஊதியம் 5200+2400*3 ஆகும்… ஆனால் நடைமுறை சிக்கல் காரணமாக நாம் கீழ்க்கண்ட முறைகளில் பெறலாம்.
5200+2400(அனைவரும்)*2.57=19500 ஆனால் இந்த ஆளும் அரசு சார்ந்த சங்கம் தொழிலாளர்களுக்கு சுண்ணாம்பு தடவும் செயலில் ஈடுபடுள்ளது…
5200+1600*2.44 =16600
ஆகவே தொழிலாளர்கள் அனைவரும் சங்க பேதம் இன்றி ஆரம்ப நிலையில் அடிப்படை ஊதியமாக ரூ.19500 ஐ பெறுவதே நமது இலக்காக வேண்டும்..
நம்மிடமே அதி மேதாவிகள் பலர் கேட்கலாம்.. அரசு ஊழியர்களுக்கும் அதே காரணி, உங்களுக்கும் அதே காரணியா , அது எப்படி கொடுப்பான் , என்று கேட்ப்பார்கள்.. அவர்கள் யாரும் உதியத்திற்க்கேற்ற வேலை கூட செய்யாமல் ஓடியில், இருப்போரும் அல்லக்கைகளும் ஆவார்கள்… ஆனால் பணியில் உள்ள தொழிலாளிக்கு தெரியும் ஆர்.சி , ஆர்.டி எவ்வாறு அழைக்களிக்படுகிறார்கள், தினக்கூலி நிரந்தரம் செய்யப்படாமல் எவ்வாறு அழைக்களிப்புக்கு உள்ளாக படுகிறார்கள், முறையான விடுப்பு இல்லை,பணிச்சுமை,பணி மற்றும் வயதுக்கேற்ற மரியாதை இல்லாமை போன்றவைகளால் போக்குவரத்து தொழிலாளி மன உளைச்சலுக்கு ஆளாகி சாவின் விளிம்பிற்கே தள்ளும் அவலமும் அரங்கேறிய வருகிறது… இந்த அனைத்து அவலங்களும் எந்த அரசு துறையில் நடக்கிறது…
இங்கு அரசு ஊழியர்களை போல தொழிலாளர்கள் யாரும் லஞ்சம் வாங்குவது இல்லை… 8 நேரம் நிர்னையிக்கப்பட்ட பகல் பணி செய்வது இல்லை… பணிக்கு வந்து விட்டு வேலை செய்யாமல் ஓப்பி அடிப்பதும் இல்லை… விழாக்காலங்களில் தொழிலாளி யாரும் வீட்டுல் குடும்பத்துடன் இருப்பது இல்லை…
மேற்க்குறிய காரணங்களுக்காகவே நாம் அரசு மற்றும் இ.பி துறையை விட மிகுதியான ஊதியம் பெற்றிருக்க வேண்டும்.. ஆகையால் போக்குவரத்து கழக தொழிலாளிகள் அரசு ஊழியர்களை விட மிகை ஊதியம் பெற தகுதி ஆனவர்கள் என்பது நம் மனதில் பதிய வேண்டும்.. அரசு நிதி இல்லை என்று கூறினாலும், அதற்கான சூழல் தற்ப்போது இல்லை என்றாலும் நாம் நமது ஒற்றுமையை பங்களிப்பாக்கி ரூ.19500 பெற களம் காணுவோம்….
நன்றி
Devaraj Mangalam
போக்குவரத்துக் கழகத்திற்கு MD – யாக IAS – ஐ நியமித்தால் நட்டத்திலிருந்து மீளுமாம். Transport secretary IAS தானே? அப்புறம் ஏன் நாசமாப் போச்சு ?
சி சு.
70% தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களா??? தொழிலாளி மானங்கெட்ட அடிமை விலங்கை அகற்றி நீண்ட நாட்களாயாச்சு மாண்புமிகு அமைச்சர் அவர்களே!!!!!!!!!!!!!!
Ananthakrishnan Munirathinam
திடீர் பேருந்து நிறுத்தம் முற்றிலும் தவறானது.. கன்டிக்கத்தக்கது..
*ஆனால்……….* ஓட்டுனரின் பத்து வருட பொறுமை , குடும்ப சூழ்நிலை, அரசின் மெத்தனம், திமுக, அதிமுக அரசுகளின் பத்துவருட துரோகம், பாரபட்சம், நாளை முதல் நடுத்தெருவில் நிற்பதைவிட … இன்றே… இப்போதே…. எனும் மனநிலைக்கு மனநிலைக்கு தள்ளப்பட்ட நிலை முழுவதும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
கடும் வெயிலிலும், மழையிலும் உழைத்தவனின் சம்பளத்தில் பிடித்த பணத்தை வைத்து டீசல் போடும் அரசின் கேவலம் மனசாட்சி உள்ள பொதுமக்களுக்கு தெரியவேண்டும்.
திடீர் நிறுத்தம் முற்றிலும் தவறானது.. கன்டிக்கத்தக்கது..
*ஆனால்……* 3 லட்சம் கோடி கடனில் இருக்கும் அரசால் அரசு ஊழியர்களுக்கு(வருமானமில்லா துறைகள் பல) 2.57 காரணியில் சம்பளம் வழங்கும்போது, அரசுக்கு கடும் உடல் உழைப்புடன் பணிபுரிந்து அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் போக்குவரத்து ஓட்டுநருக்கு 10வருடமாக கேட்டு கேட்டு கேட்டு…… தராத அரசின் வஞ்சனையை மனம் ஏற்றுக்கொள்ள முடியாத ஓட்டுநரின் திடீர் நிறுத்தம் நியாயமானதே.
இதனால் ஒருமுறை பயணிகளுக்கு பயணம் மாற்றி செல்லவதில் சிரமம் தான்..
*ஆனால்…….* இதனை ஆண்டாண்டுகாலமாக பொருத்து பொருத்து போயும் அரசு அலட்சிப்படுத்தினால் ஓட்டுநரின் நிலை காலம்பூராவும் அவலநிலையே….
Vinayagam Anbalagan
மண்புமிகு முதல்வர் அவர்களே! மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களே!
ஒரு உழைக்கும் தொழிலாளியின் மன குமுறல், ஒரு நிறுவனம் வளர வேண்டும் என்றால், தொழிலாளி வளரனும் அவன் வாழ்வாதாரம் உயர வேண்டும், மனதார வாழ்த்த வேண்டும் அப்போதுதான் (கழகம்) நிறுவனம் நன்றாக வளரும். ஆனால் கழகத்தில் நடப்பது வேறு? ஒரு சிறிய முன்னோட்டம் தங்கள் ஆட்சியில் தொழிலாளர் விரோத ஒப்பந்தம் மற்றும் 17 நாள் வேலை நிறுத்தத்தில் ஜெயில், மக்கள் பணியாளர் நீக்கம் இப்படி சொல்லி கொண்டே போகலாம் கடந்த ஆட்சி காலத்தில் போ.வ.அமைச்சரின் குடும்ப நிலை.
உங்கள் ஆட்சியின முன்னாள் போ.வ.அமைச்சரின் நிலை? இதையெல்லாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். 1.50,000 தொழிலாழியின் சாபத்தில் அவங்க என்னத்த சாதிச்சிட்டாங்க?வாழ்ந்துட்டாங்க? ஏன் உங்களுக்கு இரட்டிப்பு சம்பளத்திற்க்கும் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வுக்கும் அரசிடம் நிதி இருந்தது . உழைக்கும் இனத்திற்க்கு நிதி இல்லையா? ஆசிரியர்கள், மின் ஊழியர்கள் மற்றும்அரசு ஊழியர்களால் அரசுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது ? போக்குவரத்து ஊழியர் மட்டும் விதிவிலக்கா? 1.50,000 தொழிலாளி விரோத ஒப்பந்தத்தை ஏற்படுத்தினால் நீயும் , கையெப்பமிடும் தொ.சங்க தலைவனும் விளங்கமாட்டான் இது உண்மை. என்னுடைய பதிவை அனைவரும ஒரு பக்கத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
சக்திவேல. கு.ப
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தொடங்கிய நியாயமான போரட்டத்திற்கு போராட்டம் தொடங்கிய பின்பு ஆதரவு தெரிவித்த அனைத்து தொழில் சங்கங்களுக்கும் கோடானு கோடி நன்றி நன்றி நன்றி .தொழிலாளி வீழித்துக்கொண்டான். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க போரட்டங்களில் போரடுபவர்கள் வரலாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மன்களாக காலத்தால் அழிக்கமுடியாத வகையில் நினைவுகொள்ளப்படுவீர்கள். வரலாற்றில் எட்டப்பன்களுக்கும் இடம் உண்டு .தொழிலாளர்களோ நீங்கள் கட்ட பொம்மனாக இருப்பதும் எட்டப்பனாக இருப்பதும்உங்கள் கையில் தான் சிந்தியுங்கள் நண்பர்களே !
Siva Prasanth
58 வயதுவரை கடுமையாக உழைத்துவிட்டு பணி ஓய்வு பெறும்போது அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்த PF தொகை மற்ற பணபலன்களை பல வருடகணக்காக வழங்காமல் வயதான தொழிலாளர்களை அலையவிடும் நிர்வாகத்தை எதிர்த்து போராடுவதில் தவறென்ன உள்ளது. 15 மாதமாக பேச்சுவார்த்தை நடத்தியம் முடிவு ஏற்படுத்தாத அரசை ஏதிர்த்து போராட வேண்டாமா ஓய்வுபெற்ற தொழிலாளி கிடைக்கவேண்டிய பணபலனுக்கு என்னவெல்லாம் கனவு கண்டிருப்பான் அவனிடம் பிடித்தம் செய்த பணத்தை பெற வருட கணக்கில் கோர்டுக்கு அலைய வேண்டியுள்ளது ஆகவே போக்குவரத்து தொழிலாளியின் ஞாயமான போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள் ???
Vettri Murasu
இந்த எழவுக்கு தான் சம்பளத்திற்கு 12 | 3 ஒப்பந்தம் வேண்டாம் என்று போ.க ஊழியர்கள் கூறுகிறார்கள் பேகமிஷன் முறை வேண்டும் என்று கேட்கிறார்கள் மத்திய அரசில் அமைக்கப்படும் பேகமிஷன் எந்தவித பாடுபடும் பார்க்காமல் அனைவர்க்கும் சமமாக நிர்ணயம் செய்யப்படுகிறது அதை மாநில அரசகளும் அப்படியே நடைமுறைபடுத்துகிறது அதனால் தான் சம்பளத்திற்கு மட்டும் பே கமிஷன் வைத்துக் கொண்டு மற்ற தொழில் ரீதியான பிரச்சினைகள12 | 3-ல் பேசிக் கொள்ளலாம் எத்தனை ஆண்டுகள் வேண்டும் என்றாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் ஆனால் இதுவரை எந்தப் பிரச்சினைகளும் முழுமையாக தீர்க்கப்படாமல் தான் உள்ளது
Gubi Indran
போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகுகிறது என கூறி உரிய சம்பளம் தர மறுக்கும் அரசே! தமிழ்நாடே நஷ்டத்தில் இயங்கும் இவ்வேளையில் நூற்றாண்டு விழா கொண்டாட செலவு பண்றீரே அது யாரோட பணம். உழைப்பவனுக்கு உரிய கூலியைத்தான் கேட்கிறோம்.
பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தெரியும் அதிக வசூல் கொண்டுவர! ஆனால் அதை ஏற்க அதிகாரிகளும், அரசியல்வியாதிகளும் முன்வருவதில்லை!…
Subramanian.D
*போக்குவரத்து கழக செலவினத்தில் ….* 100 ரூபாய் ஊதியத்திற்காக செலவிடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். 45 ரூபாய் (45%) அதிகாரிகளுக்கும் , 55 ரூபாய் ( 55%) தொழிலாளர்களுக்கும் செலவிடப்படுகிறது. கழகத்தில் 100 பேர் ஊழியர்கள் எனில் …. 1 (ஒருவர்) (1%)அதிகாரி, 99 பேர் (99%) தொழிலாளர்கள் .
ஒரு சதவீதம் பேர் இருக்கும் அதிகாரிகளுக்கு 45% – ஊதிய செலவினத்தை பெறும் அதிகாரிக்கு 7வது ஊதிய விகிதத்தின் படி 2.72 காரணியில் அமல்படுத்த முடியுமாம், 99% பேர் இருந்தும் கழக ஊதிய செலவினத்தில் 55% ஐ மட்டும் பெற்றுக் கொண்டுள்ள போதும் 2.57 பெருக்கு காரணியில் வழங்க நிதி இல்லையாம்.
புரிந்து கொள்வீர் எம் கழக தொழிலாளர் தோழர்களே… தமிழக அரசின், ATP – ன் தொழிலாளர் துரோகத்தை….
Praveen Kumar
போக்குவரத்து ஊழியர்கள் நேரடியாக மக்களிடம் தொடர்புடையவர்கள். அரசின் நோக்கம் மக்களிடம் ஊழியர்கள் மேல் கோபம் எழச் செய்வதும் ஊழியர்களுக்குள்ளேயே பிளவை உண்டுபண்ணுவது. ஊழியர்கள் சங்கங்கள் உடனடியாக மக்களை சந்தித்து மக்களின் ஆதரவை பெறுவதன் வாயிலாகவே பிளவை தடுக்கவும், மக்களின் ஆதரவையும் பெற முடியும். வீடுகளில் முடங்குவது, ஆங்காங்கே கூடுவதும் வீண். போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Prabu Kamini
Prabu Kamini Atp ல் 90% உறுப்பினர்கள் இருப்பதாகவும் அவர்களை வைத்து பேருந்தைஇயக்குகிறோம் என்று மானம்கெட்ட சின்னசாமி கூறுகிறானே நானும் ஒரு ATP உறுப்பினர் தான்டா எங்கடா இயக்கிகிட்டு இருக்கிறோம் ஜெ ஜெ அம்மாவை ஏமாற்றியதை போல் தொழிலாளர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றுகிறாயா?
சி சு.
“”போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும்””” என ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
மாண்புமிகு நீதியரசர் அவர்கள் “பணப்பலன்கள் உள்ளடக்கிய பல விசயங்களை சரி செய்ய”” ஏற்கனவே அரசிற்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் போராட்டத்தின் மறுபக்கத்தையும் பார்க்கவேண்டும் எனக்கூறி ரமேஷ் அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Com sahul hameed
MLAக்களுக்கு 100% சம்பள உயர்வும், நீதிபதிகளுக்கு 200 % சம்பள உயர்வும் கொடுத்த போது, யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை; ஊழியர்களுக்கு சேரவேண்டிய 7000 கோடி ரூபாயை அரசு, ஏப்பம் விட்டதற்கும் யாரும் கவலைப்படவில்லை;ஒரு போக்குவரத்து தொழிலாளி,ஓய்வு பெற்றால், சட்டப்படி கிடைக்க வேண்டிய பென்ஷன் கிடைக்கவில்லை என்றால், அதற்கும் யாரும் கவலைப்படப் போவதில்லை. .சட்டப்படி, 15நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுத்த பின்னர் தான், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள், தங்கள் சம்பளத்தை இழந்து. ..
அரசு அறிவித்துள்ள, குறைந்த பட்ச ஊதியமான 18000 ரூபாய்க்கு, குறைவான ஊதியம் கேட்கும், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், நியாயமான போராட்டம்! போக்குவரத்து ஊழியர்கள் ஒன்றும், செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல! நமது வீடுகளிலிருந்து வருபவர்கள் தான்!
வேலைநிறுத்தம் வேண்டாம் என்று சொல்பவர்கள், ஊழியர்களின் 7000 கோடி ரூபாய் பணத்தை, ஏப்பமிட்ட அரசைக் கண்டித்து களத்தில் இறங்குங்கள்!
தயவுசெய்து, எதற்காக, போக்குவரத்து ஊழியர்கள் போராடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, கொந்தளித்தால் போதுமே………….!
Vijayaragavan Viji
அப்பாவி மக்களைப் பற்றி சிந்தித்து இருந்தால் இந்த அரசு 6 மாதத்திற்கு முன்பே பேச்சுவார்த்தையை முடித்திருக்கவேண்டும் பாவம் மக்கள் என்ன செய்வார்கள்
சி சு.
முறையற்ற பராமரிப்பு கொண்ட இந்த பேருந்தினை இயக்குவதில் அரசு பேருந்து ஓட்டுனர்களே சிறந்த அனுபவசாலிகள்
ஆகையால் தற்காலிக ஓட்டுனர்களால் இயக்கப்படும்போது பயணிகள் மற்றும் சாலைபயன்படுத்துவோரின் நிலைமை???????
#அலட்சிய அரசு
Kannan Rengaraj Tiruchchirappalli, India
தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விளம்பர பலகை வைப்பு …
தினக்கூலி அடிப்படையில் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் , MLA தேவை என அறிவிக்கவும்….

கருத்துகள் இல்லை: