வியாழன், 8 நவம்பர், 2018

விராட் கோலியின் தேசப் பற்று வேஷம் கலைந்தது. ஏன் பிற நாடுகளை விரும்புகிறீர்கள்?

‘நாட்டை விட்டு வெளியேறுங்கள்’- விராட் கோலி கருத்தால் டுவிட்டரில் ரசிகர்கள் கடும் விமர்சனம்
மாலைமலர் : இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்
என்ற கருத்தால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்திய அணி கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாள் அன்று தனக்கு சொந்தமான ‘APP’  ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுதில். அதில் ‘‘நீங்கள் இந்தியாவில்தான் வாழ வேண்டும் என்று நினைக்கவில்லை. செல்லுங்கள். வேறு எங்காவது சென்று வாழுங்கள். ஏன் இந்தியாவில் இருந்து கொண்டு மற்ற நாடுகளை விரும்புகிறீர்கள்.
இதைக்கூறுவதால் என்னைப் பிடிக்காது என்பது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், இங்கு வசித்துக் கொண்டு மற்ற நாடுகளையும், அங்குள்ள விஷயங்களையும் விரும்புவதை என்னால் நினைக்க முடியவில்லை. உங்களுடைய முன்னுரிமையை சரிதாக்கிக்கொள்ளுங்கள்’’ என்று கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த கருத்தால் டுவிட்டரில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் விராட் கோலிக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: