வியாழன், 8 நவம்பர், 2018

சிறுதானிய பண்டங்கள் தயாரிக்க பயிற்சி!

சிறுதானிய பண்டங்கள் தயாரிக்க பயிற்சி!மின்னம்பலம் :  சிவகங்கை மாவட்டத்தில் நவம்பர் 20ஆம் தேதி சிறுதானிய பண்டங்கள் தயாரிக்க பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வருகிற நவம்பர் 20ஆம் தேதி மதிப்புக்கூட்டிய சிறுதானிய பண்டங்கள் தயாரிப்பு முறை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. வரகு, திணை, குதிரைவாலி, கம்பு போன்ற சிறுதானிய பண்டங்கள் தயாரிப்பு முறை, சிறுதானியங்கள் சுத்தம் செய்யும் முறை, விற்பனை செய்யும் முறை, மதிப்புக்கூட்டல் உணவுத் தயாரிப்பு முறை, செயல்படுத்தும் முறை, பயன்படுத்தும் முறை மற்றும் சந்தைப்படுத்துதல் முறைகள் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி வகுப்பில் பங்கெடுக்க விரும்புவோர் 100 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. சிவகங்கை, குன்றக்குடியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு செல்லும் நபர்கள் கண்டிப்பாக தங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் பங்கெடுக்க விருப்பமுள்ளவர்கள் 04577 264288 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: