ஞாயிறு, 4 நவம்பர், 2018

உ.பி.யில் ஐசியு-வில் ( ICU) மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்; மருத்துவமனை ஊழியர், 4 பேர் ..


Mahalaxmi : யோகி ஆட்சி செய்யும் லட்சணம் உ.பி.யில் பயங்கரம்: ஐசியு-வில்
அனுமதிக்கப்பட்ட இளம்பெண் மீது பாலியல் பலாத்காரம்; மருத்துவமனை ஊழியர், 4 பேர் மீது சந்தேகம்
பெண்கள் மீதான் பாலியல் வன்முறைக்குப் பெயர்பெற்ற உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் மருத்துவமனை ஒன்றில் ஐசியு என்ற தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர் உட்பட 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாம்பு கடிக்காக 5 நாட்களுக்கு முன்பாக இந்தப் பெண் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த போது அவரை பாம்பு கடித்தது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஐசியுவில் இந்தப் படுபாதக பலாத்காரம் நடந்த போது அந்தப் பெண் மட்டும்தான் இருந்துள்ளார்.
ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு அவர் தனக்கு நேர்ந்த கொடுமையைப் போலீசாரிடம் கூற விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக காவலதிகாரி ஏ.சிங் என்பவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்குக் கூறியுள்ளார்.
முதல் கட்டமாக ஆஸ்பத்திரி ஊழியர் மற்றும் அவரது சகாக்கள் 4 பேர் மீது முதல் தகவலறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மருத்துவமனையின் சிசிடிவி காமரா பதிவுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

அந்தப்பெண் தன் பாட்டியிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்த போது, யூனிபார்ம் அணிந்த ஒருவரும் மற்ற 4 பேரும் ஐசியுவில் இவர் தனியாக இருந்த போது இரவில் நுழைந்துள்ளனர். ஊசி மருந்து ஒன்றை வலுக்கட்டாயமாக அவருக்கு ஏற்ற முயன்றுள்ளனர், ஆனால் பெண் போராடியுள்ளார். அப்போது அவரைக் கட்டிப்போட்டு இவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். உடனே விவகாரமாக ஆஸ்பத்திரி அதிகாரிகள் போலீசாரை வரவழைத்தனர்.
2 வாரங்களுக்கு முன்புதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நர்ஸ் படிப்பு படிக்கும் மாணவி ஒருவரை வார்டு பாய் மற்றும் மருத்துவ மாணவர் இருவரும் பலாத்காரம் செய்ததாக செய்திகள் வெளியாகின. இருவரும் கைது செய்யப்பட்டனர். இவருக்குத் துணையாக இருந்த இவரது சகோதரி தேநீர் வாங்க சென்ற சமயத்தில் நள்ளிரவில் இந்த 17 வயது பெண் பலாத்காரத்துக்கு ஆளானாள். இந்த பலாத்காரத்தில் டெஸ்ட்கள் எடுக்க வேண்டும் என்று அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து கெடுத்துள்ளனர் என்று போலீஸ் உயரதிகாரி ஷைலேஷ் குமார் பாண்டே ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: