மின்னம்பலம்: திமுக பொதுச்செயலாளர், பேராசிரியர் க. அன்பழகனுக்கு கடந்த மூன்று
நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது.
நாட்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பழக்கமுடைய அவர் இரண்டு நாட்களாக அலோபதி மருந்துகளை எடுத்துக்கொண்டுள்ளார். மேலும், கடந்த இரண்டு நாட்களாக உணவு எடுத்துக்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டுள்ளார்.
தினமும் காலையில் பாத்ரூம் போகாவிட்டால் பதட்டப்படுவார். இதற்காக பேயன் வாழைப்பழத்தைத் தேனில் கலந்து அவர் சாப்பிடுவார். நேற்று காலை பாத்ரூம் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாலையில் மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மகன் அன்பு செழியன், அன்பழகனை நேற்று மாலை (அக்டோபர் 20) கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
தகவல் கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அதுவரை சோர்வாக இருந்த அன்பழகன் ஸ்டாலினை பார்த்து அவரது கையை பற்றிக்கொண்டு சிரித்துள்ளார். என்னாயிற்று என்று ஸ்டாலின் விசாரித்தபோது, அண்மையில், வி.ஐ.டி. விஸ்வநாதன் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அன்பழகன் சென்றுள்ளார். எந்த நிகழ்ச்சிக்கும் அரை மணி நேரம் முன்னதாகவே செல்லும் பழக்கமுடையவர் அன்பழகன். அன்றைய தினமும் அவ்வாறு முன்னரே சென்ற அவரை ஏ.சி. குளிர் அதிகமிருந்த அறையில் அமரவைத்துள்ளனர் என்று ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது.
இனி இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அன்பழகனுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து, உடல்நலன் குறித்து விசாரிக்க ஏராளமான அழைப்புகளும் அன்பழகன் குடும்பத்தினருக்கு வந்துள்ளன. ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று அன்பழகனிடம் கூறிய ஸ்டாலின், தொண்டர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஊடகத்திடம் தெரிவிக்கிறேன் என்று கூறி வந்துள்ளார்.
இதை தொடர்ந்து இன்று காலை அன்பழகனை சந்தித்த பின்னர் ஊடகத்திற்கு பேட்டியளித்த ஸ்டாலின், “பேராசிரியருக்கு கடந்த இரண்டு மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. அதனால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது காய்ச்சல் குறைந்துள்ளது. இரண்டு நாட்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இந்த பேட்டியின் மூலமாக தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
இதே கருத்தை வலியுறுத்தி பின்னர் அறிக்கையும் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், பேராசிரியர் அன்பழகன் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால் உடல் நலம் தேறி நலமுடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டொரு நாட்களில் உடல் நலம் தேறி அன்பழகன் இல்லம் திரும்ப இருப்பதால் திமுக நிர்வாகிகள் யாரும் நேரில் வர வேண்டாம் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக