மின்னம்பலம்: "பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை
உறுப்பினர்களுடன் அம்மா மக்கள் முன்னற்றக் கழகம் துணைப் பொதுச் செயலாளர்
டி.டி.வி. தினகரன் இன்று சென்னை அசோக் நகரில் உள்ள அவரது கட்சி
அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் 18 பேரை தவிர, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரும் பங்கேற்றனர். வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் என்ன பேசினார் தினகரன் என விசாரித்தோம். " வரும் 24 ம் தேதி 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரலாம். எனக்கு தெரிந்து உங்க பதவிக்கு எதுவும் ஆபத்து வராது. எடப்பாடி தரப்புல இருந்து உங்க பல பேருக்கு எவ்வளவு அழுத்தம் வருதுன்னு எனக்கு தெரியும். இனியும் வரும் என்பதும் எனக்கு தெரியும். அதனால இனி கொஞ்ச நாளைக்கு நீங்க யாரும் ஊரில் இருக்க வேண்டாம்.
வெளியூருக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ போறதுக்கான ஏற்பாட்டை நானே பண்றேன். நான் சொல்ற வரைக்கும் நீங்க அங்கேயே இருங்க. அநேகமாக நீங்க யாரும் தீபாவளிக்கு கூட உங்க சொந்த ஊரில் இருக்க முடியாது. வெளியில்தான் இருக்க வேண்டி வரும்.
நவம்பர் மாசம் 5ஆம் தேதி வாக்கில் நீங்க சென்னைக்கு வந்தால் போதும். நவம்பர் மாசம் 10ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி வரைக்கும் 22 தொகுதிகளிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். மக்களின் தொகுதி பிரச்னையை கவனிக்காத எடப்பாடி அரசை கண்டித்து பேசுவோம். எல்லா தொகுதிக்கும் நானே நேரில் வரேன். ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை, திருப்போரூர், பாப்பிரெட்டிப்பட்டி, குடியாத்தம், பெரம்பூர், பரமக்குடி, மானாமதுரை, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், சாத்தூர், ஆம்பூர், பூந்தமல்லி, சோளிங்கர், தஞ்சாவூர், அரூர், பெரியகுளம், அறந்தாங்கி, திருவாடானை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, ஆர்.கே.நகர் என முடிப்போம். இது நிச்சயமாக எடப்பாடி அரசுக்கு சவாலாக இருக்கும். உங்க துணையோடுதான் இதையெல்லாம் செஞ்சு முடிக்க முடியும். உங்க பயணம் குறித்த விபரங்களை விரைவில் சொல்றேன். ரெடியாக இருங்க. பத்திரமாக இருங்க..." என்று பேசி முடித்திருக்கிறார் தினகரன்.
இந்த தகவல்கள் அத்தனையும் சேலத்தில் இருந்த முதல்வருக்கு உடனடியாக உளவுத் துறை மூலமாக சொல்லப்பட்டு இருக்கிறது. 'அவங்க வெளியூர் கிளம்பும் முன்பாக பேசிப் பாருங்க. ஒன்று சேர்ந்து எல்லோரும் கிளம்பாமல் பார்க்கணும்...' என்று அமைச்சர்கள் சிலருக்கு அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார் முதல்வர். " என்று முடிந்தது மெசேஜ்.
அதற்கு லைக் போட்ட ஃபேஸ்புக், " எப்படியோ மீண்டும் அரசியலில் ஆடு புலி ஆட்டம் தொடங்கிவிட்டதும் யார் ஜெயிப்பார்கள் பார்ப்போம்'

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக