செவ்வாய், 23 அக்டோபர், 2018

தியாகராஜன் :Metoo’ – எனது 50 ஆண்டு நல்லபெயரைக் கெடுத்துவிட்டார்.. அவதூறு வழக்கு தொடருவேன்

tamil.thehindu.com : மீ டூவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் தியாகராஜன் தம் மீது மீ டூவில் பாலியல் புகார் கூறிய, பிரித்திகா மேனன் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார்.
மீ டூ புகாரில் வைரமுத்து, அர்ஜுனை அடுத்து நடிகர் பிரசாந்தின் தந்தையும் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் மீது ஒரு பெண் புகார் அளித்திருந்தார். பொன்னர் சங்கர் ப டப்பிடிப்பின் போது, தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நடிகர் தியாகராஜன் மீது, பிரித்திகா மேனன் என்ற பெண், மீ டூ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தனக்கு ஏற்பட்ட இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளிப்பதற்காக, சென்னை வடபழனியில் நடிகர் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது தியாகராஜன் பேசியதாவது:
''ஏதோ ஒரு பெண் எங்கிருந்தோ முகநூலில் நடிகர் தியாகராஜன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பதிவு செய்தவுடன் நான் ஐம்பது ஆண்டுகளாக சம்பாதித்த பெயர் பறிபோனது.

தியாகராஜன் மீ டூவில் சிக்கினார்,  பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கடைகளில் போஸ்டர் தொங்குகிறது. மீ டூ ஒரு நல்ல மூவ்மென்ட், நல்ல விஷயம். ஆனால் அதை தவறாகப் பிரயோகிப்பது கூடாது. அவ்வாறு தவறாகப் பிரயோகித்தால் அது நிரூபிக்கப்பட்டால் பிறகு  மீ டூ இயக்கத்துக்கே கெட்ட பெயர் வந்துவிடும்.
என் மீது பழி சுமத்திய பெண் மீது கண்டிப்பாக மான நஷ்ட வழக்கு தொடரப்போகிறேன். தற்போது அந்தப் பெண் எங்கிருக்கிறார் என்கிற விபரம் தெரியவில்லை''.
இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: