tamil.oneindia.com - shyamsundar.
கணினி, செல்பேசிக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்
சென்னை: கணினி, செல்பேசிகளுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய பிரபல தமிழறிஞர் பச்சையப்பன் சென்னையில் இன்று காலை காலமானார்.கி.த பச்சையப்பன் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். இவர் தனது 85 வயதில் மரணம் அடைந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் தமிழறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசி மூச்சு வரை தமிழ் மொழிக்காக பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளிதழ்களில் சமஸ்கிருத ஆதிக்கம் இருந்த போது அதை தமிழை நோக்கி திருப்பியவர் பச்சையப்பன்.
இவரது குடும்பம் தொடர்பான சிவில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றம் வந்துள்ளார். அப்போது இவர் மயங்கி விழுந்து உள்ளார். பின்புதான் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இவர் இந்திய சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கணினி, செல்பேசிகளில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த ஆங்கிலத்திற்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் பச்சையப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக