வெள்ளி, 21 செப்டம்பர், 2018

ஜெயலலிதா ஈழத்திற்காக பேசிய பேச்சுக்கள்..!

Babu Vmk : நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான எல்டிடியின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கே கொண்டுவந்து சேர்த்து ராஜிவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென்று திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன். 20-9-1991 அன்று பி.வி.நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய ராணுவத்தை அனுப்பியேனும் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். படுகொலையைப் புரிந்ததற்காக பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டுமென்று கோரியிருந்தேன். அதன்பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வற்புறுத்தினேன்.
🔷 16-4-2002 அன்று சட்டப் பேரவையிலே ஜெயலலிதாவே முன்மொழிந்த தீர்மானம் :
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும்.

🔷 தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.
🔷 என்னுடைய பெருமுயற்சியின் காரணமாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் இயக்கம் 14-5-1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
🔷 12-4-2002 - விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான சமரசப் பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்காது எனப் பிரதமர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் அதேசமயம் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பால சிங்கத்துக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது குறித்து மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்படும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளதை எதிர்க்கிறேன். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் எந்த இடத்திலும் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பது அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு. இந்த விஷயத்தில் தமிழகத்தை மத்திய அரசு நிர்ப்பந்திக்காது என்ற நம்பிக்கை உள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்” என்று ம.தி.மு.க., பா.ம.க., போன்ற சில கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்களே என்று கேட்டபோது,
🔷 13/4/2002 - விடுதலைப் புலிகள் தடை செய்யப் பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தேச துரோகக் குற்றம் செய்ததாகக் கருதப்பட வேண்டும். எனவே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது புதிய “பொடா” சட்டத்தின்கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். இச்சட்டத்தின்கீழ் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கும் உள்ளது.
🔷 எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவுப் பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன. (நமது எம்ஜிஆர் 3-10-2008)
🔷 அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது வியப்பாக, விந்தையாக உள்ளது. இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது.
(நமது எம்.ஜி.ஆர் - 16.10.2008)
🔷 இறுதிக்கட்ட போரின்போது ஜெயலலிதா
நிருபர் :- ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே?
ஜெயலலிதா :- அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில் அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் – ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் இப்போது என்ன நடைபெறுகிறது என்றால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்துவைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களைக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
🔷 தமிழக அரசால் ஈழத்திற்கு வழங்கப்படும் பொருள்கள் ஐ.நா. மூலமாக அனுப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததற்குப் பிறகும்... கலைஞர் அரசு செய்யும் வசூல் `விடுதலைப் புலிகளுக்கே' என்று அறிக்கை விடுத்தார் ஜெயலலிதா.
மனிதாபிமான அடிப்படையில் ஈழ மக்களுக்கு கலைஞர் அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்களை கூட கொச்சைப்படுத்தியவர் ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை: