புதன், 19 செப்டம்பர், 2018

மோடியின் தம்பி பிரகலாத் மோடி சென்னையில் முகாம் ,, கமிஷன் வேட்டை? அந்த 3 காண்டேயினர் கரன்சியும் போதாதோ?

Flasbhack : Prahlad Modi, has illegally constructed a commercial complex spread across 360 square meters near Rabari Colony crossroads in Mangaldeep Estate's shed no 4. The AMC served first concern notice on February 6 this year, almost one and a half years after the building had been constructed. The second notice was issued on March 21, 2018.
`தமிழ்நாட்டைக் கெடுத்து வைத்திருக்கிறீர்கள்!' - எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த மோடி தம்பிமோடியின் தம்பி பிரகலாத் மோடிக்கு இங்கே என்ன வேலை?  இவரின் லீலைகளும் குறைந்தது அல்ல. அகமதாபாத் காப்பறேஷன் நிலத்தில் அடாவடியாக ஐந்து மாடி காம்பிளக்ஸ் கட்டிய தில்லாலங்கடி ..  தமிழகத்தை கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று
எடப்பாடி பன்னீர் கோஷ்டியை எச்சரித்தாரம்! முழு இந்தியாவையும் நாசமாக்கி வைத்தவன் தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்கிறாராம்
 அதாவது உரிய கமிசனை வெட்டாமல்  காலம் தாழ்தினார்ல் எப்படி என்று கேட்கிரோரோ ?நாடாளுமன்ற   தேர்தலுக்கு அதிமுகவின் கஜனாவைத்தான்  பாஜக மலைபோல நம்பி இருக்கிறது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருப்பதை மறுப்பதற்கு இல்லை.  . குஜராத் கொள்ளையர்களுக்கு தமிழ்நாட்டை விற்று பேரீச்சம் பழம் வாங்க அதிமுக ரெடி ... நாடு போனால் என்ன ஆட்சி இருந்தால் போதும் கொள்ளையை தொடரலாம்தானே?  
விகடன் :எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த மோடி தம்பி ஆ.விஜயானந்த் : தமிழக அரசியல் சூழல்களைக் கவனிப்பதற்காக வந்திருக்கிறார் பிரகலாத் மோடி. கடந்த ஆறு மாதங்களாகவே இதற்கான பணிகளில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. "நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளுக்காக வந்திருக்கிறார் பிரகலாத். 'மக்கள் மத்தியில் உங்கள் ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது' என முதல்வரிடம் நேரடியாக எச்சரித்தார் அவர்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க. இதன் முதல்கட்டமாக சென்னை, தீவுத்திடலில் நடந்த பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார் அமித் ஷா. இதில், சுமார் 16,000 தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
அடுத்தகட்டமாக, 'ஒன்றரை லட்சம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பேசுவதற்காக, பிரதமர் மோடி வர இருக்கிறார்' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். இந்நிலையில், பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் சென்னை வருகை, ஆளும்கட்சி வட்டாரத்தின் உதறலை அதிகப்படுத்தியிருக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் ஜெய் ஆனந்த் எனப் பலரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது, மொழிபெயர்ப்புப் பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரையும் உடன் அழைத்து வந்திருக்கிறார்.
ஜெய் ஆனந்த்பிரகலாத் மோடியின் வருகை குறித்து நம்மிடம் பேசிய கோட்டை வட்டார பிரமுகர் ஒருவர், "தமிழக அரசியல் சூழல்களைக் கவனிப்பதற்காக வந்திருக்கிறார் பிரகலாத். கடந்த ஆறு மாதங்களாகவே இதற்கான பணிகளில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். இங்குள்ள அரசியல் சூழல்களை அறிந்துகொள்ளவும் அவர் ஆர்வம் காட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில், கணிசமான இடங்களை வெல்வதற்கு பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், 'தமிழ்நாட்டைக் கெடுத்து வைத்திருக்கிறீர்கள்' எனக் கோபத்தோடு கூறியிருக்கிறார் பிரகலாத். இதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, 'இந்த அரசாங்கத்தைப் பற்றி சிலர் தவறாகப் பேசுகின்றனர். விவசாயத்துறைக்கு ஏராளமான நன்மைகளைச் செய்திருக்கிறேன். இந்த அரசாங்கத்துக்கு மக்களிடம் நல்ல பெயர் இருக்கிறது' எனக் கூறி, சில தாள்களை எடுத்துக் காட்டியிருக்கிறார். 
தொடர்ந்து பேசும்போது, 'என்னுடைய பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கின்றனர். அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. சிறப்பான ஆட்சியை வழங்கிக்கொண்டிருக்கிறேன்' என விவரித்ததாகத் தகவல் வெளியானது. இதற்கு முன்னதாக, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் பிரகலாத். அப்போது பேசிய பன்னீர்செல்வம், 'கட்சியில் எனக்கிருக்கும் அதிகாரத்தை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். என்னைக் காலி செய்யும் நோக்கில் சிலர் செயல்படுகின்றனர்' எனப் பேசியதாகவும் தகவல் வந்தது. இதையடுத்து, திவாகரன் மகனும் அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் ஜெய் ஆனந்த்தையும் சந்தித்துப் பேசினார் மோடியின் தம்பி. அப்போது, 'எந்தெந்த சமூகங்கள் இங்கு பெரும்பான்மையாக இருக்கின்றன. யாரையெல்லாம் நாம் கையில் எடுக்கலாம்?' என்றெல்லாம் இரண்டு மணி நேரத்துக்கும் ஆர்வமாகக் கேட்டு அறிந்துகொண்டார் பிரகலாத்" என்றார் விரிவாக... விகடன்
 https://www.dnaindia.com/ahmedabad/report-notice-to-pm-narendra-modi-s-brother-prahlad-modi-for-illegal-building-2628219

கருத்துகள் இல்லை: