வெட்டப்பட்டார். சம்பவ இடத்திலே அவரது உயிர் பிரிந்துள்ளது.
மிர்யாளகுடாவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆதிக்க சாதியை சேர்ந்தவருமான மாருதி ராவின் மகளான அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்தான் 24 வயதான பெருமாள பிரனாய்.
இந்த எதிர்ப்பை மீறி ஹைதராபாத் சென்ற பெருமாள பிரனாயும், அம்ருதாவும், அங்குள்ள ஆரிய சமாஜில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி திருமணம் செய்துள்ளனர்.
இதனால் கோபம் கொண்ட மாருதி ராவ், பெருமாள பிரனாயை மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை கர்ப்பிணியான தனது மனைவியை பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு பிரனாயும், அவரது தாயும் அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்கியவர் அந்த ஆயுதத்தை அங்கேயே விட்டு சென்றுள்ளார்.
இதற்கு முன்னரும் சில நேரங்களில் பிரனாயை தாக்க முயற்சிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நல்கொண்டா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரெங்கநாத் தெரிவிக்கையில், "இதுவொரு ஆணவக்கொலை. குற்றவாளிகளை விரைவில் பிடிக்க முயற்சித்து வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.re>அம்ருதாவின் தந்தை மாருதி ராவும், அவரது தம்பி ஷிவானும் இணைந்து திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி இந்த கொலையை நடத்தியிருக்கலாம் என்று காவல் துறை சந்தேகப்படுகிறது.
"மாருதி ராவ் கோடீஸ்வரர். அவர் தொந்தரவு அளிக்கலாம். எனவே, இருவக்கும் திருமணமானவுடன், வேறிடத்திற்கு சென்றுவிட மகனையும், மருமகளையும் வற்புறுத்தினேன். தனது தந்தையின் கோபத்தை தானே தணித்து விடுவேன் என்றும் அம்ருதா கூறிவிட்டார்" என்று பிரனாயின் தந்தை பாலசாமி பிபிசியிடம் தெரிவித்தார்,
"திருமணத்திற்கு பிறகு அவர்கள் எனது மகனை கொல்ல திட்டமிட்டிருந்தனர். பிரானயும் எச்சரிக்கையுடன்தான் இருந்தார். ஆனாலும், இந்த கொடிய சம்பவம் நடத்துவிட்டது" என்று அவர் கூறினார்.e>தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறை ஐ.ஜியிடம் இந்த ஜோடி முன்னதாக கேட்டுள்ளது.
இந்த விடயத்தில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவை அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக