tamilthehindu :தெரியாமல் பழகிவிட்டேன், பின்னர் அவர் நடத்தை தெரிந்து ஒதுங்கியபோது
என்னையும், என் குழந்தைகளையும் தாக்கினார். அவர் ஒரு சைக்கோ நான் நரக
வேதனையை அனுபவித்தேன் என்று நிலானி கதறினார்.
கதறலுடன் அவர் அளித்த பேட்டி: “ரெண்டு நாளா என்னைப்பற்றி தலைப்புச் செய்தியாக வெளியாகி வருகிறது. அது எதுவுமே உண்மையில்லை. சித்தரித்ததுதான் அதிகம் உள்ளது. உள்ள விஷயங்கள் பாதிதான் உண்மை. எல்லோரிடமும் உணமையைச் சொல்லத்தான் வந்திருக்கிறேன்.
முதலில் நான் தலைமறைவாக இல்லை. நான் தப்பு பண்ணல, தலைமறைவாக இருக்கும் அவசியமும் எனக்கு இல்லை. நான் இரண்டு குழந்தைகள் உள்ள தாய். கணவர் இல்லை. எனக்கு அப்பா அம்மா அண்ணன் தம்பி கிடையாது. நான் ஒரு அனாதை.
லலித்குமார் எனக்கு சாதாரண நண்பராக அறிமுகம் ஆனார். பின்னர் அவர் மூலம் சில உதவிகள் கிடைத்தது. எதுவென்றால் என் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, வீட்டுக்கு கூட்டிட்டு வருவது போன்று உதவினார்.
போகப்போக லலித்குமார் என்னை திருமணம் செய்துக்கொள்ள கேட்டார். நீங்களும் அனாதை, நானும் அனாதை ஏன் நாம திருமணம் செய்துக் கொள்ளக் கூடாதுன்னு கேட்டார். எனக்கு அப்போது ஐடியா இல்லை. ஏனென்றால் நான் இரண்டாவது திருமணத்தை கனவில்கூட நினைத்துக் பார்க்கவில்லை.
என்னுடைய இரண்டு குழந்தைகளுக்காக மட்டுமே நான் ஒரு சாதாரண வாழ்க்கையை இந்த நிமிடம் வரை வாழ்ந்து வருகிறேன். என் கணவர் எங்களை நிராதரவாக விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார். நான் சீரியல் நடிகை என்றுதான் பெயர். என்னிடம் ஒரு கார் கூட கிடையாது.
ஆடம்பரம் இல்லாத சாதாரண வாழ்க்கைத்தான் வாழ்கிறேன். அவ்வளவு நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். அவர் சொன்னபோது நான் யோசித்தேன். இரண்டாவது திருமணம் என்னுடைய குழந்தைகள் வாழ்க்கையை பாதிக்கும் வேண்டாம் என்றேன்.
ஆனால் போகப்போக அவர் மிகவும் பாதுகாப்பான மனிதர்போல் மிகவும் நல்ல ஆதரவான மனிதர்போல் நிறைய உதவி செய்வதுபோல் ஒரு நிலையை உருவாக்கினார். எனக்கும் மற்ற ஆண்களால் பிரச்சினைகள் வந்தது. சரி பாதுகாப்புக்காகவாவது திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.
காந்தி லலித்குமாருடன் நான் திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தில் பழகியது உண்மை. நான் அதை மறுக்கவில்லை. நானும் அவரும் ஒரு ஷார்ட் பிலிம் எடுத்தோம். அதில் சில போட்டோக்கள் நெருக்கமாக எடுத்துக் கொண்டோம். இந்த போட்டோக்களை என் பேஸ்புக் ஐடிய திருடி நான் போட்டது போல் லலித் குமார் போஸ்ட் செய்தார். இதுதான் முதல் பிரச்சினை.
ஊரெல்லாம் எல்லோரிடமும் மனைவி என்பது போன்று பிரபலப்படுத்தினார். இதனால் ஊர் முழுதும் தெரியவந்தது. திருமணத்திற்கு ஓக்கே சொன்னேன். ஒப்புக்கொண்ட ஒரு வாரத்தில் அவருடைய மொபைல் போனை எடுத்து பார்த்தபோது அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததும் பல பெண்களை ஏமாற்றி பணம் பிடுங்கியதும் தெரிய வந்தது.
இதைப்பார்த்ததும் நான் அவரை திட்டி வீட்டை விட்டு விரட்டினேன். ஆனாலும் என்னை விடாமல் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தார். போட்டோக்களை வெளியிடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்து தாலிக்கட்ட முயற்சித்தார். ஒரு கட்டத்தில் லலித்குமாரிடமிருந்து தப்பிக்க வீட்டை மாற்றினேன். ஆனால் அங்கும் கண்டுபிடித்து வந்து என்னை தாக்கி, தாலிகட்ட முயன்றார். அதற்கு என் குழந்தைகளே சாட்சி.
இதை நான் அவர்கள் குடும்பத்தில் கூறியபோது அவனை விட்டு விலகி விடு அவனது தாயார் தற்கொலை செய்துக்கொண்டதே இவனால்தான் என்று தெரிவித்தனர். நான் ஒருகட்டத்தில் மறுக்கவே என்னை வீடு புகுந்து தாக்கி என் கை உடைந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 10 நாட்கள் அனாதைப்போல் கிடந்தேன். அதன் பின்னர் போலீஸ் வழக்காகி திருமங்கலம் காவல் நிலையத்தில் அழைத்து எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பி வைத்தார்கள். இது நடந்தது 2016-ம் ஆண்டு.
அதன் பின்னர் ஒதுங்கி இருந்தார். நானும் நிம்மதியாக இருந்தேன். அந்த இடைப்பட்ட காலத்தில் இரண்டு மூன்று பெண்களை ஏமாற்றியுள்ளார். அதில் தனலட்சுமி என்ற பெண்ணை ஏமாற்றி ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.1.5 லட்சம் ஏமாற்றியதாக புகார் வந்தது. இதற்கு அத்தனைக்கும் லலித்குமாரின் நண்பர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்தான் உதவி.
அதன் பின்னர் நான் தூத்துக்குடி விவகாரம் சம்பந்தமாக சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டு கைதானபோது மீண்டும் வந்து நட்பை தொடர்ந்து, என்னை ஜாமீனில் எடுக்க வந்தார். ஆனால் அதற்கான பணம் என்னுடையது. நான் வெளியே வந்த பின்னர் அவர் இந்த ரெண்டு மாதம் என்னை செய்த டார்ச்சர் இருக்கே சொல்லி மாளாது. நானே கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன்.
லலித்குமார் ஒரு சைக்கோ, அவரது அக்காள் கணவரையே கத்தியை எடுத்து கொலை செய்ய முயன்றார். என்னை அவர்கள் வீட்டார் முன்னாடியே மிதி மிதி என்று மிதித்தவர். என்னை திருமணம் செய்துக் கொள்ளச்சொல்லி என் குழந்தைகளை கடுமையாக தாக்கியுள்ளார். அவரிடமிருந்து விலக நான் போராடியது எனக்குத்தான் தெரியும்.
அவர் என்னை பல முறை உடல் ரீதியாக நெருங்க முயன்றார் எதற்கும் நான் அனுமதிக்கவில்லை. ஒரே ஒரு நாள் மனைவி போல் இரு உன்னை விட்டு விடுகிறேன் என்று கூறி காலில் மெட்டி போட்டு கூடவே இருந்து போட்டோ எடுத்தார். அதன் பின்னர் அடிக்கடி பெட்ரோல் பாட்டிலை வாங்கி வைத்துக்கொண்டு திருமணம் செய்யாவிட்டால் தற்கொலைச் செய்துக்கொள்வேன் என்று மிரட்டினார். ஒரு கட்டத்தை நாம் வாழ வேண்டாம் நீயும், நானும், உன் குழந்தைகளும் ஒன்றாக செத்துவிடுவோம் என்று மிரட்டினார்.
கடந்த சனிக்கிழமை நான் மயிலாப்பூரில் ஷூட்டிங்கில் இருந்தபோது வெளியில் 10 நிமிடத்திற்குள் வராவிட்டால் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொள்வேன் என்று மிரட்டினார். நான் மன உலைச்சலில் வெளியே வந்து போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தேன். அவர்கள் கூப்பிட்டு விசாரித்து எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.
மறுநாளும் கே.கே.நகரில் ஷூட்டிங்கில் இருந்தபோதும் இதே போன்று மிரட்டல். நான் என்னை விட்டுவிடு எனக்கு 10 வயதில் மகள் இருக்கிறார், இனி எனக்கு கணவர் வேண்டாம் என்று தெரிவித்தேன். பின்னர் 12 மணி அளவில் போன் வந்தது. ஒரே ஒரு வாய்ப்பு கொடு நான் திருந்தி வாழ்கிறேன் என்று கூறினார். நான் மறுத்துவிட்டேன்.
பின்னர் என் அசிஸ்டெண்ட் வந்து யாரோ தீக்குளித்துவிட்டார் என்று சொன்னவுடன் கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷன் சென்று கேட்டேன். லலித்குமார் என்றார்கள். உடனடியாக கே.எம்.சிக்கு ஓடினேன். ஒரு உயிர் என்பதால் போய் பார்த்தேன். இப்ப சொல்லுங்கள் இதில் நான் எங்கே இவர் மரணத்திற்கு காரணமானவள். எந்த வகையில் நான் இதில் பொறுப்பாக முடியும் சொல்லுங்கள்.”
அவருக்கு நீங்கள் பணம் கொடுத்தீர்களா? அல்லது அவரிடம் பணம் வாங்கினீர்களா?
என்னிடம் தான் வாங்கி இருக்கிறார். கைச்செலவுக்குத்தான் பணம் கொடுப்பேன். அவ்வளவுதான்.
எப்படி உங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது?
சினிமா பீல்டில் தனக்கு பெரிய பழக்கம் உண்டுன்னு பேஸ்புக்கில் பல முன்னணி இயக்குனர்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை போட்டிருந்தார். அதைப்பார்த்து பழகினேன்.
நான் பழகியது உண்மை, இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் பெண்கள் விஷயத்தில் தவறாக நடக்கும் ஒருவர் உடன் என்னால் எப்படி வாழ முடியும். பத்து வயதில் ஒரு பெண் குழந்தையை வைத்துள்ளவள் எப்படி ஏற்றுக்கொள்வேன். என்னை அபிராமிக்கு இணையாக என்னை ஒப்பிட்டு போடுகிறீர்களே சோஷியல் மீடியாவில் எப்படி இவ்வாறு தோன்றுகிறது.
எனக்கு இன்னொரு கல்யாணம் செய்ய தெரியாதா? யாருடனாவது இருந்து சுகமாக வாழத்தெரியாதா? இந்த நிமிடம் வரை குழந்தைகள் தான் உலகம் என்று நேர்மையாக வாழ்ந்துக்கிட்டிருக்கிறேன். என்னை ஏன் இவ்வளவு கேவலப்படுத்துகிறீர்கள்.
நான் செய்த தப்பு என்ன? என் கணவர் என்னை ஏமாற்றிச் சென்றது தப்பா? இந்த நிமிடம் வரை உண்மையாக வாழ்ந்துக்கொண்டிருப்பது தப்பா? ஒரு கெட்டவன் என்று தெரிந்தும் ஒதுங்கியது தப்பா? நான் என்ன தப்பு செய்தேன். அவரிடம் ஏமாற்ற என்ன இருக்கு. சொத்து இருக்கா? வேலை இருக்கா? படிக்காதவர் அவர். அவரிடம் ஏமாற்ற என்ன இருக்கு.
நீங்கள் கமிஷனர் அலுவலகத்தில் என்ன புகார் கொடுத்தீர்கள்?
நான் எங்கேயும் ஓடிவிடவில்லை. என்னைப்பற்றி தலைமறைவுன்னு போட்டதை இல்லேன்னு சொல்லத்தான் சென்றேன். என்னைப்பற்றி வந்த வீடியோக்களை நிறுத்தச்சொல்ளுங்கள் , எனக்கு 2 குழந்தை இருக்கு அவர்களுக்கு வாழ்க்கை இருக்கு தயவு செய்து வீடியோவை நிறுத்தச்சொல்லுங்கள் நான் செத்தே போய்விடுவேன், என்று புகார் அளிக்கத்தான் சென்றேன்.
இப்ப எல்லாம் வெளியே வந்துருச்சுங்க அதனால் தைரியமா வெளியே வந்துவிட்டேன். இந்த மாதிரி பப்ளிசிட்டி ஆகக்கூடாது என்பதற்காகத்தான் முயன்றேன். என்னுடைய வலியைப் பொறுத்துக்கொண்டேன். 6 ஆண்டுகள் என்னை கணவர் விட்டுட்டு போய் விட்டார்.
ஒருத்தரைக்கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தது தவறா? இதற்கு பெயர் முறை தவறிய உறவா? நம்பினேன் அவர் கெட்டவர் என்று தெரிந்து ஒதுங்குகிறேன். சாலையில் போகிறவர் வருகிறவர் தீக்குளித்தால் அதற்கு நான் பொறுப்பா? இவ்வாறு கதறி அழுதபடி நிலானி பேட்டி அளித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக