வெள்ளி, 21 செப்டம்பர், 2018

ராஜீவ் காந்தி கொலைக்கு முதல் நாளே பயண திட்டத்தை மாற்றிய மூவர் .. ஜெயா ,சு.சாமி,வாழப்பாடி .

Kalai Selvi : உண்மையை சொல்லட்டுமா...!! 1991 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை மும்முரமாக நடந்து கொண்டிருந்த நேரம், மும்முனை போட்டி, அனைத்து தலைவர்களும் சுழன்றடித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது அந்த மே மாதம் 21 ஆம் நாள் ஸ்ரீபெரும்புதூரில் இளந்தலைவர், காங்கிரஸ் கட்சியின் பிரதம வேட்பாளர் இரவு 10.15 மணிக்கு மனித வெடிக்குண்டுக்கு பலியான செய்தி வெளிவந்த பிறகுதான் இந்தியாவில் பரபரப்பாக பரப்புரை நடத்தி வந்த அத்தனை தலைவர்களின் சுற்றுப்பயண திட்டங்களும் மாற்றப்படுகின்றன. ஆனால் மூன்று பேரின் பயணத்திட்டம் மட்டும் ஒரு நாளைக்கு முன்பே மாற்றப் படுகிறது ..!
அந்த மூவரில் முதல்வர் ஜெயலலிதா. அன்றைய ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர். இரண்டாமவர் சுப்பிரமணியன் சாமி. அன்றைய மத்திய சந்திரசேகர் தலைமையிலான காபந்து அமைச்சரவையின் உள்துறை அமைச்சர். விடுதலைப் புலிகளோடு உறவு என்று தமிழகத்தில் கலைஞரின் ஆட்சியை ஆளுநரின் அறிக்கையின்றி கலைத்த ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனன். இன்னொருவர் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.

சிங்களர்கள் பீகார் மற்றும் ஒரிசா பகுதிகளில் இருந்து ஈழத்துக்கு குடிபெயர்ந்த ஆரியர்கள், அவர்களை நான் எப்போதும் ஆதரிக்கிறேன் என்று தான் எழுதிய " விடை தெரியாத வினாக்கள் " என்ற புத்தகத்தில் எழுதிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனன் சு.சாமி.
ஜெயலலிதாவுக்கு சசிகலா என்ற குதிரையும் வேண்டும். ஆரிய பார்ப்பனர்களின் உறவும் வேண்டும். ஏனெனில் அவர் எப்போதுமே இரண்டுக்கும் மேற்பட்ட குதிரைகளில் சவாரி செய்வதில் அலாதி விருப்பமுடையவர். ஆனால் மன்னார்குடி சசிகலாவுக்கும், ஆரியப் பார்ப்பனர்களுக்கும் ஏழாம் பொருத்தம். ஜெயாவையும், சசியையும் பிரிக்க சு.சாமி, சோ, குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் எவ்வளவோ முயன்றார்கள். பிரிந்த போது மகிழ்ந்தார்கள். மீண்டும் இணைந்த போது வெகுண்டார்கள் . கடைசியில் மன்னார்குடி சசிகலாவுக்கும், நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுக்கும் நடந்த அதிகார யுத்தத்தில் கிராஸ் ஃபையரில் ஜெயலலிதா மாண்டே போனார்.
போராளித் தலைவர் பிரபாகரனை இண்டர்நேஷனல் பறையன் என்று சொன்னவன் சு.சாமி. அந்த வழக்கில்தான் சு.சாமிக்கு அ.தி.மு.க. மகளிரணி உயர்நீதிமன்ற வாசலில் பாவாடையை தூக்கிக்காட்டி சிறப்பு வரவேற்பு கொடுத்தது.
ஜெயாவையும், சசியையும் பிரிக்க நடந்த பல்வேறு முயற்சிகளிலும் சு.சாமி தோற்றாலும் தன் முயற்சியை அவன் கைவிடவே இல்லை. துக்ளக் சோ வின் மூலம் தொடர்ந்து முயன்று கொண்டே வந்தான். சோ கேட்டுக்கொண்டதற்கிணங்க ஐ.கே.குஜ்ரால் அரசை கவிழ்க்க ஜெயின் கமிஷன் அறிக்கையை வெளியிட வைத்து அன்று தி.மு.க. அங்கம் வகித்த மத்திய ஆட்சிக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியை வாபஸ் வாங்க வைத்தவன் சு.சாமி.
1998 ல் பா.ஜ.க. வோடு அ.தி.மு.க. கூட்டணிக்கு போன போது அந்தக் கூட்டணியில் திருச்சியில் வேட்பாளராக நின்றவன் சு.சாமி. தன் பேச்சை பிரதமர் வாஜ்பாய் கேட்காததால், தி.மு.க. ஆட்சியை கலைக்காததால் அன்றைய பா.ஜ. க. ஆட்சியை டீ பார்ட்டி கொடுத்து ஜெயாவையும், சோனியாவையும் கைகோர்க்க வைத்து கலைத்தவன் சு.சாமி.
இலங்கையின் நலனுக்காக தமிழகம் வளம் கொழிக்கும் சேது சமுத்திர திட்டத்திற்கு ராமரின் பெயரால் தடை பெற்றவன் சு.சாமி. அவனுடன் இணைந்து நீதிமன்றம் போனவள் ஜெயலலிதா.
2009 ல் ஈழ இன அழிப்பு நடந்த போது தன் முழு ஆதரவையும் ராஜபக்ஷேவுக்கு கொடுத்தவன் சு.சாமி. சாமி எதை சொன்னானோ அதையே சோ வும் சொன்னான். அதையே ஜெயலலிதாவும் சொன்னாள். அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தி.மு க. கண்டித்தது. இந்த பார்ப்பன பன்னாடைகள் சொன்னார்கள் "விடுதலைப்புலிகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதால்தான் சிங்கள ராணுவம் மக்களை கொல்கிறது. உள்நாட்டுப் போர் நடக்கும் போது இது வாடிக்கைதான் " என்று.
இந்த சு.சாமிதான் 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஊழல் நடந்ததாக ஆ.ராசா மீது 1,76,000 கோடி பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்தவன். இவனுக்கு அதிகார மட்டத்தில் இருந்து அப்ரூவராக மாறி உதவியவன் ஆசிர்வாதம் ஆச்சாரி. அவனும் ஸ்ரீரங்கத்து பார்ப்பான்.
இவ்வளவு பின்னணி உள்ள சு.சாமிதான் ராஜபக்ஷேவை 12.09.2018 அன்று தன் விருந்தாளியாக அழைத்தவன். இப்போது ராஜபக்ஷே அதிபராக கூட இல்லாத சூழலில் அவனை இந்தியா அழைத்து , மோடியை, சோனியாவை, ராகுலை, தந்தி தொலைக்காட்சியை சந்திக்க வைத்தது சு. சாமி , ஆசிர்வாதம் ஆச்சாரி என்ற பார்ப்பனர்கள்தான்.
அப்படின்னா பா.ஜ. க. ஆதரித்துதானே ஆகணும். சு.சாமி ஆர்.எஸ்.எஸ். ஆசிர்வாதத்தோடு இந்திய அரசியலை காலத்துக்கேற்ப நகர்த்தும் கோமாளி. சு.சாமிக்கு எந்த கட்சியும் நிரந்தரம் இல்லை. எங்கிருந்தாலும் அவன் இயங்குவது ஆர்.எஸ்.எஸ். ன் இலட்சியத்தை அடைய, பார்ப்பன ஆதிக்கத்தை நிறுவ ...!! அவ்வளவுதான் அவன் அரசியல்..!!
-வனத்தையன் தமிழரிமா

கருத்துகள் இல்லை: