தினமணி :சென்னை: வசந்த் அன்ட்கோ நிர்வாகியும், நாங்குநேரி
சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவுமான வசந்தகுமார் அதிக வருமானம் பெறும்
எம்எல்ஏக்களில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பா ஆவர் . இவரத்து அண்ணன் குமரி அனந்தன் பழம் பெரும் காங்கிரஸ் தலைவர் ஆவார்.
இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்களின் வருமானம், சொத்து விவரங்கள் தொடர்பான தகவல்களை லாபநோக்கற்ற அமைப்பான ஏடிஆர் நேற்று வெளியிட்டது. அதில், தெரிய வந்திருக்கும் தகவலின் அடிப்படையில், இந்திய அளவில் அதிக ஆண்டு வருமானம் ஈட்டும் 20 எம்எல்ஏக்களின் பட்டியலில் 66 வயதாகும் வசந்தகுமார் முதல் இடத்தில் உள்ளார். அவரது வருமானம் ரூ.24.64 கோடி என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார். இவர்தான் வசந்த் அண்ட் கோ நிறுவனர் என்பதும், வசந்த் அண்ட் கோ மீடியா நெட்வொர்க் பிரைவேட் லிமிடட்டின் பொது மேலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக எம்எல்ஏ
பி.வி. பாரதி (57) மிகக் குறைந்த வருமானம் பெறும் எம்எல்ஏவாக உள்ளார்.
இவரது ஆண்டு வருமானம் ரூ.60,709 மட்டுமே. நாட்டிலேயே மிகக் குறைந்த
வருமானம் பெறும் எம்எல்ஏக்களின் பட்டியலில் 18வது இடத்தில் பாரதி உள்ளார்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234
எம்எல்ஏக்களில், 2016ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப்
பத்திரத்தில் 33 பேர் தங்களது வருமான வரிக் கணக்குக் குறித்து தகவலைப்
பதிவே செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக