தீக்கதிர் : தெலுங்கானாவில் நடந்த சாதி ஆணவப்படுகொலை: மாருதி ராவை தூக்கிலிடக் கோரி செப். 23ல் ஹைதராபாத்தில் பேரணி-பிரணாய் மனைவி அம்ருதா அறிவிப்பு
ஹைதராபாத், செப்.19-
ஹைதராபாத், செப்.19-
தனது கணவரைக் கொலை செய்ததற்காக, தன் னைப் பெற்ற தந்தையை தூக்கிலிட
வேண்டும் என்றுவலியுறுத்தி, தெலுங்கானாவைச் சேர்ந்த இளம்பெண் அம்ருதா,
செப்டம்பர் 23-ஆம்தேதி பேரணி அறிவித்துள்ளார்.தெலுங்கானா மாநிலம்,நல்கொண்டா
மாவட்டம், மிர்யாலகுடா பகுதியைச் சேர்ந்தவர் அம்ருதா வர் ஷினி. சாதி
ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்த இவர், தலித்வகுப்பைச் சேர்ந்த பெருமல்ல
பிரணாய்குமாரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது 5
மாதகர்ப்பிணியாகவும் இருக்கிறார்.இந்நிலையில், தலித் ஒருவரின் கருவை, தனது
மகள்சுமப்பதா? என்று ஆத்திரமடைந்த அம்ருதாவின் தந்தைமாருதி ராவ், கடந்த
வியாழக்கிழமையன்று அம்ருதாவின் கண் முன்பாகவே பிரணாய் குமாரைப்
படுகொலைசெய்தார்.
இக்கொடூரச் சம்பவம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்தது. குற்றவாளி மாருதி ராவை கைது செய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைகள் எழுப்பினர். தற்போது மாருதி ராவ், அவரது சகோதரர் ஷரவன், நண்பர் அப்துல் கரீம், முக்கியக் குற்றவாளியான ஷர்மா உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இதனிடையே, சாதிவெறியால் தனது காதல் கணவரை கொடூரமாக கொலை செய்த,தனது தந்தை மாருதி ராவைத்தூக்கிலிட வேண்டும் என்றுஅம்ருதா வலியுறுத்தியுள் ளார். இந்த கோரிக்கையை முன்வைத்து, செப்டம்பர் 23-ஆம் தேதி ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி ஹைதராபாத்தில் பேரணி நடத்தப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
#தீக்கதிர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக