
விகடன் :கே.குணசீலன்
ம.அரவிந்த்:
கணவர் இறந்து இருந்தாலும்
பரவாயில்லை காவிரி விஷயம் என்பது டெல்டா மக்களோட வாழ்வாதார பிரச்னை. அதில்
அவர்களின் ஜீவாதாரம் அடங்கியிருக்கிறது அதனால் திட்டமிட்டபடி உண்ணாவிரதப்
போராட்டத்தை நடத்துங்கள் என சசிகலா கூறியதாகத் தங்க தமிழ்ச்செல்வன்
தெரிவித்துள்ளார்.< இந்த ஏற்பாட்டுப் பணிகளைத் தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இது குறித்துப் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு எதையும் செய்ய மாட்டார்கள். மத்திய அரசுக்குப் பயந்து, இங்கு இருக்கிற மைனாரிட்டி அரசு அவர்களுக்குத் துணையாகத்தான் செல்வார்கள். அவர்களுக்கு ஆட்சியை ஓட்டினால் போதும். 37 எம்.பி-க்களும் மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பி.ஜே.பி அரசை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவர் இறந்து இருந்தாலும் பரவாயில்லை காவிரி விஷயம் டெல்டா மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை அதில் அவர்களின் ஜீவாதாரம் அடங்கியிருக்கிறது. அதனால் திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள் எனச் சசிகலா கூறியுள்ளார். எனவே, பிரமாண்டமாகப் போராட்டம் நடைபெறும் எனத் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக