வியாழன், 22 மார்ச், 2018

புரோக்கர் நடராசன் + நெடுமாறன் + வைகோ"

Dhakshanamoorthi : ஜெயலலிதா எப்பொழுதும் புலிகளுக்கு எதிராகவே பேசுவார்!
மிக கடுமையாகவே புலிகளிடம் நடந்தும் கொள்வார்!
ஆனால் மறுபுறம்  கலைஞர் எப்பொழுதும் புலிகளுக்கு ஆதரவாகவே நடந்து கொள்வார்.
கலைஞர் புலிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டார் என்ற குற்ற சாட்டிலேயே திமுகவின் ஆட்சியை சந்திரசேகர் அரசு கவிழ்த்தது .அப்பொழுது மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர் சு. சாமி .
கலைஞர் இலங்கை அகதிகளுக்கு கல்லூரிகளில் இடங்களை ஒதுக்கினார். .ஆனால் அதன் பின் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்பாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த கோட்டாவை உடனே நீக்கினர் .
அதுமட்டுமல்ல அகதி முகாம்கள் மீது கடுமையான கெடுபிடிகளை அரங்கேற்றினர் , ஆனாலும் புலிகளாலும் புலிகளின் தமிழக அடியாட்களாலும் மூளை சலவை செய்யப்பட்ட  அகதிகள் கூட அதிமுகவையே வழக்கம் போல ஆதரித்தனர்.,
ஜெயலலிதா எவ்வளவுதான் புலிகளை மதிக்காமல்  ஆதரவும் கொடுக்காமல் நடந்து கொண்டாலும் புலிகள் சதா அதிமுகவை ஆதரிப்பது என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது
அதற்கு முக்கிய காரணம் நடராசனின் லஞ்சம்!
அதற்காகவே   புலிகள் எப்பொழுதும் அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவார்கள் ..
புலிகள் எவ்வழியோ அவ்வழியே புலம் பெயர் தமிழர்களும் அதிமுக ஆதரவாளர்களாகவே இருந்தனர்


நடராசன் சத்தம் போடாமல் புலிகளுக்கு வேண்டியற்றை கொடுத்துகொண்டே அவர்கள் மூலம் தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான காய்களை நகர்த்தியே வந்துள்ளார் ..
புலிகளும் பெற்ற பணத்திற்கும் சலுகைகளுக்கும் கூலியாக எப்பொழுதும் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வருவதில் தங்களால் முடிந்ததை செய்தனர் நடராசனின் பேரோலில் அரசியல் செய்த வைகோ நெடுமாறன் பாண்டியன் தமிழருவி மணியன் மகேந்திரன் போன்றவர்கள் எல்லாம் புலிகளின் ஏவலை மேற்கொண்டனர்.
வைகோவை திமுகவுக்கு எதிராக துரோகம் செய்ய தூண்டியது இந்த புலிகளும் நடராசனும்தான்!

இதுதான் இயக்குனர் பாரதிராஜா கடந்த முப்பது வருடங்களாக தமிழக அரசியலை இயக்கியவர் நடராசன் என்றார் .... நடராசன் ஜெயலலிதா எம்ஜியார் புலிகள் போன்றவர்களின் கதைகள் ....... இன்னும் பல இரகசியங்கள் வெளிவர வேண்டும்

பிற்சேர்க்கை : 
மா.நடராசன் எனும் "மர்ம நபர்"
அதிமுகவையும் ஜெயலலிதாவின் ஆட்சிகளையும் கட்டுப்படுத்திய (சசிகலா) நடராசன் உயிருடன் இருந்தபோது...
அவர் தனது செல்வாக்கைச் செலுத்திய கடந்த முப்பதாண்டுகளில் அவரைப் பற்றி பருண்மையாக எதையுமே எழுதாத இந்து நாளிதழானது இப்பொழுதோ அவர் 'மர்மமான, விளக்கமுடியாத நபர்' எனவும் அவரது 'செல்வாக்கு மற்றும் அதிகாரத்தின் தோற்றுவாய் யாரும் அறியாதது' எனவும் எழுதியுள்ளது.
இதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால்..
🔵 அண்மையில் இந்திய ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிரணாப் முகர்ஜி, சு. சாமி, வெங்கையா நாயுடு (இவர்கள் நடராசனோடு கடந்த பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்தவர்கள்), தமிழகத்தின் நிழல் முதலமைச்சர் குருமூர்த்தி வகையறாக்கள் (இவர்கள் நடராசனோடு முரண்பட்டவர்கள்), காஞ்சி மட விஜயேந்திர சங்கராச்சாரி (இத்தகையோர் நடராசனோடு முன்பு முரண்பட்டு அண்மையில் நெருக்கமாக இருந்தவர்கள்) ஆகியோரை கேட்டறிய வேண்டும்.
🔴 இவர்களில் இந்தியாவின் முதல் குடிமகன் என்ற பதவியிலிருந்த பிரணாப் முகர்ஜியோ நடராசனை எப்போதும் குடியரசு நாள் விருந்துக்காக அழைத்து அவரும் கலந்து கொள்வார். நடராசன் எந்த அரசுப் பதவியில் இல்லாமல் இருந்தாலும் சமூகத்தில் எந்த துறையிலும் பங்களிக்காதவராக இருந்தாலும் பிரணாப் முகர்ஜி அவரை ஜனாதிபதி மாளிகையின் விருந்துக்கு அழைத்த மர்மம் என்ன என்று இந்து இதழ் அவரைத்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.
🔵 அத்துடன் நடராசன் தனது சொந்த ஊரான விளார் என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் நடத்தும் பொங்கல் விழாவில் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக இருந்தபோதே அவர் தனது தம்பி, தங்கை, தங்கையின் கணவர் இவர்களில் ஒருவரையோ இருவரையோ கலந்துகொள்ள வைத்த மர்மம் என்ன என்று அவரையே கேட்டறிந்தால் நடராசனுடைய செல்வாக்கின் மர்மம் அறியலாம்.
🔴 சசிகலா தமிழக முதலமைச்சர் ஆவதற்கு மோடியின் ஆட்சியும் குருமூர்த்தியும் எதிராக செயற்பட்டுவரும் நிலையில் சு.சாமியோ சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு தனது ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். எனவே சு. சாமியை கேட்டறிந்தாலும் நடராச மர்மம் அறியலாம்.
🔵 நடராசனால் கட்டுப்படுத்தப்பட்ட ஜெயலலிதாவின் ஆட்சியில் சிறைக்குச் சென்ற ஜெயேந்திர சங்கராச்சாரி சென்ற ஆண்டில் நடராசன் குடும்பத்தைச் சேர்ந்த தினகரனை தனது மடத்திலேயே சந்தித்து உபசரித்து அனுப்பியதன் மர்மம் என்னவென்று இப்போது விஜயேந்திர சங்கராச்சாரியை கேட்டறிந்தாலும் நடராச மர்மத்தை அறியலாம்.
🔴 மடத்தை கேட்க முடியவிட்டாலும் மடத்தோடு நெருக்கமாக உள்ளவரும் தினகரனுக்கு எதிராக இருப்பவருமான குருமூர்த்தியை கேட்டால் நடராச மர்மத்தை ஒப்பீட்டளவில் நிச்சயமாக அறியலாம். ஏனெனில் குருமூர்த்தியும் நடராசனும் முரண்பட்டவர்கள்.
🔵 அப்படியும் முடியவில்லை என்றால் இந்து ஆங்கில நாளிதழிலேயே 'Diplomatic Editor' ஆகப் பணியாற்றும் சு. சாமியின் மகளான சுஹாசினி ஹைதரை கேட்டறிவதும் சுலபம்.
🔴 இந்து நாளிதழானது நடராசன் இறந்த பின்னரே அவரைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளது. ஆனால் ஜூனியர் விகடன், நக்கீரன் போன்றவை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நடராசன் 'மர்ம நபர்', மாஸ்டர் மைண்ட்', 'பெசண்ட் நகர் மனிதர்' என எழுதி வந்துள்ளதால் அவற்றை எழுதியவர்களிடமும் கேட்டறியலாம்.
ஒரு மாபியாவை மாபியா என சொல்லத் தயாராக இல்லாத ஊடகங்கள் இவ்வாறுதான் எழுத தயாராக இருக்கின்றன.
- Bhaskar Viswanathan Muthu

கருத்துகள் இல்லை: