சனி, 24 மார்ச், 2018

சந்தையூர் . பின்னணியில் அருந்ததியினரின் 127% to 255% அளவு உள்இடஒதுக்கீட்டு....?

Adv Manoj Liyonzon : அருந்ததியினரின் 127% to 255% அளவு உள்இடஒதுக்கீட்டு
முழக்கம்
தமிழக வரலாற்றில், ஏன் இந்திய வரலாற்றிலேயே 127% அளவு இடஒதுக்கீட்டு உரிமையை கொண்ட ஒரே பட்டியல் சாதி “அருந்ததியர்” மட்டும் தான்
ஒட்டுமொத்தமுள்ள 76 பட்டியல் சாதியினருக்கும் சேர்த்து 18% இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமுள்ள பட்டியல் சமூகத்தில், அருந்ததியர் மக்கள் தொகை 13.06%
இதில் பட்டியல் சமூகத்திற்கான 18% இட ஒதுக்கீட்டில், அருந்ததியர் மக்களுக்கு 100% உள்இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற நிலையில், அது 2.35% ஆக வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் வழங்கப்பட்டதோ 3% உள்இடஒதுக்கீடு. அதாவது 127% அளவு வழங்கப்பட்டது.
காரணம் 2.35% என்று இல்லாமல் Round Off to the next 10 or 100s அடிப்படையில், 2.35%ஐ Round off ஆக 3% என்று வழங்கப்பட்டது.
அதாவது ஒட்டுமொத்த பட்டியல் சாதியினருக்குமான 18% இட ஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கு 127% அளவு உள் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இது நியாயமானதே, ஏற்றுக்கொள்ளக்கூடியதே. வரவேற்கத்தக்க ஒன்று தான். இதை யாரும் எதிர்க்கவில்லை, புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை தவிர.
தற்போது உள்ள 3% (127% அளவு) உள் இடஒதுக்கீட்டு உரிமையை, 6%மாக (255% அளவு) உயர்த்த முழக்கமிடுகிறார்கள் சில அருந்ததியர் இயக்கங்களும் கட்சிகளும்.

6% உள் இடஒதுக்கீடு, அதாவது 255% அளவு உரிமை எந்த வகையிலும் சாத்தியமே இல்லை என்றபோதிலும், இந்த முழக்கத்தின் பின்னணியிலுள்ள அரசியல் என்பது, அப்பாவி அருந்ததியர் மக்களை 6% உள் இடஒதுக்கீடு கோரி போராட தூண்டிவிட்டு, அந்த போராட்டத்தை தலைமை தாங்கி, அந்த கூட்டத்தை வாக்கு வங்கியாக காட்டி, அதன் மூலம் தனிப்பட்ட முறையில் அரசியல் ஆதாயம் அடைவதே இந்த அமைப்புகளின் கட்சிகளின் இலக்கு.
இந்த இலக்கை நோக்கிய பயணம் தான் 5 பேர் தீ குளித்தல், ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக காட்டிக்கொள்ள சந்தையூர் தீண்டாமை சுவர் எனும் பொய் குற்றச்சாட்டு போன்றவை
சுயநலனுக்காக, அருந்ததியர் மக்களை இவ்வாறு தவறாக வழிநடத்தும் இந்த மாபாதக செயலை, ஆதித்தமிழர் கட்சி ஜக்கையன், ஆதித்தமிழர் பேரவை அதியமான், புரட்சிப்புலிகள் திலீபன் போன்றோர் செவ்வனே செய்து வருகிறார்கள்
ஒடுக்கப்பட்ட எந்த ஒரு பட்டியல் சாதிக்கும் 100% இட ஒதுக்கீட்டு உரிமை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். அதை தான்டி 1% அளவு கூடுதலாக இருந்தாலும் அது உரிமை அபகரிப்பே
அந்தவகையில் தற்போது அருந்ததியர் சமூகம் கொண்டிருக்கும் 3% (127%) இட ஒதுக்கீட்டு உரிமை நியாயமானதே. ஆனால் அதை 6% (255%) ஆக உயர்த்த கோருவதென்பது, சக 75 பட்டியல் சாதியினரின் உரிமையை அபகரிக்க முயற்சிப்பதாகும்
ஒரு வாதத்திற்கு
18% இட ஒதுக்கீட்டில், 3% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதால், ஏனைய 75 பட்டியல் சாதியினர் அனைவரும் 15%த்திற்குள் தான் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும். இது Sufficient தான்.
அதுவே 18% இட ஒதுக்கீட்டில், 6% உள் இடஒதுக்கீடு கோரினால், ஏனைய 75 பட்டியல் சாதியினர் அனைவரும் 12%த்திற்குள் தான் வாய்ப்பை பெற முடியாது. இது பட்டியல் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் -155% பற்றாக்குறையை உண்டாக்கும்
ஆகவே படித்த இளைய அருந்ததியர் சமூகம், இந்த உண்மையை புரிந்துகொண்டு ஏனைய அருந்ததியர் மக்களுக்கும் உண்மையை விளக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: