சனி, 24 மார்ச், 2018

58 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் முடிவுகள்: பாஜக- 19; காங்.- 10; திரிணாமுல்-4; பிஜேடி-3; டிஆர்எஸ்-3

: Mathi - Oneindia Tamil டெல்லி: 58 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ராஜ்யசபாவில் ஆளும் பாஜகவுக்கு 58 எம்.பிக்கள்தான். ஆனால் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ளன. ராஜ்யசபாவில் தனிப் பெரும்பான்மைக்கு 126 எம்.பிக்கள் தேவை. இந்த நிலையில் 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
அதிகபட்சமாக உ.பியில் 10, மகாராஷ்டிராவில் 6, பீகாரில் 6, மத்தியபிரதேசத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 33 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகினர். எஞ்சிய 25 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. உத்தப்பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில்தான் இந்த 25 எம்.பி. பதவி இடங்களுக்கான போட்டி நிலவியது.
 58 இடங்களுக்கான தேர்தல்களில் பாஜக 19; 
காங்கிரஸ் 10; திரிணாமுல் காங்கிரஸ் 4; பிஜூ ஜனதா தளம் 3; தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 3 இடங்களிலும் வென்றுள்ளன






1
PartyElected unopposedNewly Elected
Total Seats (58)
2
BJP161228
3
CONG5510
4
TDP202
5
YSRCP101
6
JD(U)202
7
RJD202
8
Shiv Sena101
9
NCP101
10
BJD303
11
BSP000
12
SP011
13
JDS000
14
TRS033
15
TMC044
16
OTH000

கருத்துகள் இல்லை: