திங்கள், 19 மார்ச், 2018

2 ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு

மாலைமலர் : 2 ஜி வழக்கில் முன்னாள் மந்திரி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
 2 ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு புதுடெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் டெல்லி சி.பி.ஐ கோர்ட் தீர்ப்பு வழங்கியது. சி.பி.ஐ போதிய ஆதாரங்களை அளிக்கவில்லை எனக்கூறின நீதிபதி ஓ.பி சைனி, ஆ.ராசா, கனிமொழி மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.

சிறப்பு கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருந்தது. அதற்கேற்ப சட்ட நிபுணர்களுடன் சி.பி.ஐ ஆலோசனை செய்து வந்தது. இந்நிலையில், சிறப்பு கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை நீதிமன்ற பதிவாளர் ஆராய்ந்த பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: