வெள்ளி, 23 மார்ச், 2018

20 ஆம் ஆத்மி எம்எல்ஏ தகுதி நீக்கம் செல்லாது: டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தினமலர் :டில்லியில் 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என உத்தரவிட்டுள்ள டில்லி ஐகோர்ட், இது குறித்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. ஒத்திவைப்பு ஆதாயம் தரும் பதவிகளை வகித்ததால் டில்லி ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஜனாதிபதிக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்ததை அடுத்து 20 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தேர்தல் கமிஷனின் தகுதிநீக்க பரிந்துரையை எதிர்த்து ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 20 பேரும் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் வாதம் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் விசாரணை இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய டில்லி ஐகோர்ட், தகுதி நீக்கம் செல்லப்பட்டது செல்லாது. தகுதி நீக்கம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், எம்எல்ஏக்கள் இரட்டை பதவியில் வகிப்பது மறுப்பதற்கில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த கெஜ்ரிவால், ‛‛நீதி வென்றது'' என்றார்.

கருத்துகள் இல்லை: