வெள்ளி, 23 மார்ச், 2018

மாணவரின் ஆடையைக் களையச் சொல்லித் துன்புறுத்தல்!

மாணவரின் ஆடையைக் களையச்  சொல்லித் துன்புறுத்தல்!மின்னம்பலம்: நாகர்கோவிலில் மாணவரின் ஆடையை களையச் சொல்லி துன்புறுத்திய பள்ளி நிர்வாகியை போலீஸார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வடசேரியில் எஸ்எம்ஆர்வி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ப்ளஸ் 2 தேர்வெழுதிய மாணவர் ஒருவரை, பள்ளியின் நிர்வாகி ஒருவர், ஆடைகளைக் களையச் சொல்லி அடித்து மிரட்டிய காட்சிகள் வாட்ஸ்அப்பில் வெளியாகியது.
பள்ளி நிர்வாகி ரவுடியைப் போல மாணவரை மிரட்டி, மாணவரின் சட்டையைக் கழற்றி முட்டிபோட்டி நிற்கவைத்து தண்டனை வழங்கியுள்ளார். ஆனால், எதற்காக மாணவருக்குத் தண்டனை வழங்கினார் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், மாணவரிடம் அத்துமீறிய பள்ளி நிர்வாகியிடம் விசாரணை நடத்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான குழுவினர் எஸ்எம்ஆர்வி பள்ளிக்குச் சென்றனர். ஆனால், அவர்களைப் பள்ளி நிர்வாகி மதிக்கவில்லை. தனது இருக்கையில் இருந்து எழுந்துபோவதும் வருவதுமாக இருந்தார். பின்னர், திடீரென தலைமறைவாகியுள்ளார். மாணவர்களுக்கு வழங்கப்படும் இதுபோன்ற கடுமையான தண்டனைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற பள்ளிகளால்தான் மாணவர்கள் எதிர்தாக்குதல்களில் ஈடுபடும் விபரீத நிகழ்வுகளும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: