வெள்ளி, 23 மார்ச், 2018

வினய் குமார் சர்மா...ரூ.6,000 கோடி மோசடி அம்பலம்... ஹிமாச்சல் பிரேதேச தொழிலதிபர்

Nahan, March 22: CID sleuths have arrested a director of Paonta Sahib-based firm Indian Technomac Company Limited in a nearly Rs 6000 crore fraud case.
சிக்கினார் அடுத்த தொழிலதிபர் ரூ.6,000 கோடி மோசடி அம்பலம்
தினமலர்.:ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜெகத்பூர் கிராமத்தில், 'இந்தியன் டெக்னோமேக்' என்ற நிறுவனத்தை, வினய் குமார் சர்மா என்பவர் நடத்தி வந்தார். இயக்குநர் பொறுப்பில் இருக்கிறார்.
; இவர், தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிக்கும் பணிக்காக, பல்வேறு வங்கிகளில், 2,167 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த தொகையை அவர் திரும்ப செலுத்தவில்லை. நிறுவன ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வில்லை; அவர்களின் வைப்பு நிதியில் பல்வேறு மோசடிகள் செய்திருப்பது தெரிந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன், அவரது நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, வினய் குமார், 2,175 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது. அவரது நிறுவனம், 750 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி வைத்து உள்ளது.


இந்நிலையில், 'இந்தியன் டெக்னோமேக்' நிறுவனம், கடனை திருப்பிச்செலுத்தாதது, வரி ஏய்ப்பு, ஊழியர்களின் மாதச் சம்பளம் உள்ளிட்ட வற்றில், ஒட்டு மொத்தமாக, 6,000 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ராகேஷ் குமார் சர்மா தலைமறைவானார்.<>இந்த மோசடி தொடர்பாக, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ராகேஷ் குமார் சர்மா, இயக்குனர்கள், வினய் குமார் சர்மா, ரங்கநாதன் ஸ்ரீனிவாசன், அஸ்வினி குமார் சாஹு ஆகியோர் மீது, 6,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந் நிலையில், வினய் குமார் சர்மாவை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: