ஞாயிறு, 1 அக்டோபர், 2017

சசிகலா விடுப்பில் வரமுடிவு .. நடராஜன் உடல் நிலை கவலைக்கிடம் ?

மாலைமலர் :நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் சிறையில் உள்ள சசிகலா பரோலில் வர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்: சசிகலா பரோலில் வர முடிவு பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் நடராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிறுநீரகம் உள்பட பல உறுப்புகள் செயல் இழந்துள்ளது. இதனால் அவரது உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது. இந்த தகவல் ஜெயிலில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கணவரை சந்திக்க சசிகலா முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக பரோல் கேட்டு சிறைத்துறை அதிகாரிகளிடம் விண்ணப் பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பரோல் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை? பரோல் பெற தகுதி உள்ளதா? என்று சிறை கண்காணிப்பாளரிடம் சசிகலா கேட்டு தெரிந்து கொண்டதாக தெரிகிறது. மேலும் பரோல் பெறு வதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.


இதுதொடர்பாக கர்நாடக மாநில அ.தி.மு.க. (அம்மா) அணி செயலாளர் புகழேந்தி கூறியதாவது:- நடராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தகவல் சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கணவரை பார்க்க பரோலில் தன்னை விடுதலை செய்ய கோரி சசிகலா இதுவரை மனு கொடுக்க வில்லை. பரோலில் வருவது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் பேசி உள்ளோம். சசிகலாவை பரோலில் எடுப்பதற்காக நியாயமான காரணங்களை எடுத்துக் கூறி விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டோம்.
நாங்கள் கொடுத்த ஆவணங்களை பார்த்த ஜெயில் அதிகாரி போதுமான ஆவணங்கள் உள்ளதால் பரோல் கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று கூறி உள்ளார். இதையடுத்து இது தொடர்பாக சசிகலாவிடமும் அனுமதி பெற்றுள்ளோம். நாளை மறு நாள் (செவ்வாய்க் கிழமை) பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதனால் நடராஜனை பார்க்க சசிகலா பரோலில் வருவாரா? என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: