புதன், 4 அக்டோபர், 2017

அழகிரி எச் .ராஜா சந்திப்பு ..ராஜாவின் தந்தை மறைவுக்கு அனுதாபம்!


காரைக்குடி: பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி திடீரென சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசை மிக கடுமையாக எதிர்த்து வருகிறது திமுக. இந்த நிலையில் திடீரென தம்முடைய மணிவிழாவுக்கு வருமாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் எச். ராஜா. இதை ஏற்றுக் கொண்ட ஸ்டாலினும் எச். ராஜாவின் மணிவிழாவுக்கு நேரில் சென்று வாழ்த்தினார். இந்த நிலையில் இன்று திடீரென ஸ்டாலினின் சகோதரர் மு.க. அழகிரி எச்.ராஜாவை காரைக்குடியில் சந்தித்து பேசியிருக்கிறார். ஏற்கனவே ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை கலகலக்க வைத்துவிட்டது டெல்லி.
இதையடுத்து திமுகவுக்குதான் டெல்லி குறிவைக்கும் என கூறப்பட்டு வருகிறது. பாஜக தலைவர்களே இதை பகிரங்கமாக பேசியும் வருகின்றனர். இந்நிலையில் எச். ராஜாவுடன் மு.க. அழகிரி திடீரென சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளாக தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கியிருக்கும் அழகிரியின் இச்சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் எச்.ராஜாவின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவே அழகிரி சந்தித்ததாகவும் கூறப்படுகிறது /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: