வியாழன், 5 அக்டோபர், 2017

டெங்குவை கட்டுப்படுத்த நிதி இல்லை ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அதிர்ச்சித் தகவல்

தீக்கதிர்   : டெங்குவை ஒழிக்கஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. ஆனால் அதற்கான நிதி வந்து சேராததால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊரகவளர்ச்சித்துறை அலு வலர் சங்க மாநிலத்தலைவர் சுப் பிரமணியன் தெரிவித்தார்.மதுரையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலசெயற்குழு கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிர மணியன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; மத்திய, மாநில அரசுகள் கொடுக்க வேண்டியநிதி ஊராட்சி நிர்வாகங் களுக்கு இன்னும் சரியான முறையில் வரவில்லை.

குறிப்பாக 25.10.2016க்கு பிறகு கடந்த பத்து மாதங்களாக அன்றாட செலவு களுக்காக மாதாமாதம் வழங்கி வந்த தொகை கிடைக்கவில்லை. அதனால் ஊராட்சி பணிகளை செய்வதற்கு, ஊராட்சி மன்ற செயலர்கள் கடனாக ரூ.2 லட்சம் வரை பெற்று இதுபோன்ற பணிகளை செய்துவருகிறார்கள். அதிலும் பெண் ஊழியர்கள் தங்களு டைய நகைகளை அடகு வைத்து செலவு செய்யும் அளவிற்கு, நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். இந்தநிலையில் ஊராட்சி நிர்வாகங்களுக்கு, சரியான முறையில் நிதிகள் வழங்கப்படுகிறது என்று அமைச்சர்கள் கூறு கிறார்கள். தற்போது, டெங்கு பரவாமல் தடுப்பதற்கு உரிய நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இயக்குநர் பாஸ்கரன் கூறி யுள்ளார். ஆனால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு நிதி வந்து சேரவில்லை. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழு வதும் போராட்டம் நடத்த உள்ளோம்.
எல்.இ.டி பல்ப் வாங்கி யதில் ரூ.400 கோடி அளவிற்கு முறைகேடு நடை பெற்றுள்ளதாக மனு கொடுத்தும் பயனில்லை. 4 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்கள், பம்ப் ஆப்ப ரேட்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளம் கொடுக்கமுடியவில்லை. எனவே ஊரக வளர்ச்சித்துறைக்கு டெங்கு ஒழிப்பு போன்ற பணிகளுக்கு வரும் 10ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்கவில்லை என்றால் பணிகள் முடங்கும் நிலை ஏற்படும் என்றார். பேட்டியின்போது, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.கிருஷ்ண சாமி, பொருளாளர் வி. நாகராஜன், துணைத் தலை வர் மா.விஜயபாஸ்கர், மதுரை மாவட்டச் செய லாளர் அ.பாலாஜி ஆகி யோர் உடனிருந்தனர். செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களில் திட்டப்பணிகள் அமல்படுத்துவதில் அவசரம் காட்டப்படுவதாகவும், பய னாளிகளின் பங்களிப்பை உறுதி செய்யாமல் நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
#தீக்கதிர்

கருத்துகள் இல்லை: