புதன், 18 அக்டோபர், 2017

இந்தியாவின் பணக்காரக் கட்சி பாஜக!

Venkat Ramanujam · #Congress 28-12-1885(132yrs) : 750 Cr 
#BJP 06-04-1980( 37 yrs) : 850 Cr 
கட்சி நிதி சொத்து மட்டுமில்லை எங்கே இருந்து பணம் கட்சிக்கு வந்தது (unknown source) என்ற விஷயத்திலும்
 #காங்கிரஸ் ஐ கீழே தள்ளி #பிஜேபி டாப் . ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் BJP RSS H Raja Tamilisai Soundararajan K.T.Raghavan Narayanan Thirupathy Sumanth Raman Pon Radhakrishnan உள்ளிட்ட அறிவாளிகள் ஏன் கட்சி விஷயத்தில் பணம் கொடுப்போர் சோர்ஸ் mandatory ஆகாமல் இருக்கிறது , 
why 3.5 yrs bjp failed to implement #lokpal என்று கேக்க சொல்லுங்கள் ... 
திராவிட ஆட்சியில் #தமிழ்நாடு கீழே போச்சுப்பா என்று கூச்சமே இல்லாமல் உபதேசம் செய்வார்கள் ..
minnambalam : இந்தியாவின் பணக்காரக் கட்சியாக பாஜக உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏ.டி.ஆர்) கூறியுள்ளது.
இந்தியாவில் உள்ள ஏழு தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு தொடர்பான புள்ளிவிவரம் ஒன்றைத் தனியார் அமைப்பான ஏ.டி.ஆர். வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சிகள் தாக்கல் செய்த சொத்து மதிப்பை அடிப்படையாகக்கொண்டு இந்தப் புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2004-05ஆம் ஆண்டில் இந்தக் கட்சிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது 2015-16ஆம் ஆண்டில் எவ்வளவாக உள்ளது போன்ற தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
அதன்படி, இந்தியாவின் பணக்காரக் கட்சியாக பாஜக உள்ளது. 2004-05ஆம் ஆண்டில் ரூ.122.93 கோடியாக இருந்த பாஜவின் சொத்துமதிப்பு 627 சதவிகிதம் அதிகரித்து 2015-16ஆம் ஆண்டில் 893.88 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தக் காலகட்டங்களில் காங்கிரஸ் சொத்து மதிப்பு என்பது ரூ.167.35 கோடியில் இருந்து 758.79 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 353.41 சதவிகித உயர்வாகும்.
பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்களும் இந்தப் புள்ளிவிவரத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த பதினோரு ஆண்டு காலகட்டத்தில் திருணாமுல் காங்கிரஸின் சொத்து மதிப்பு என்பது 17,896 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் அந்தப் புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தக் காலகட்டத்தில் ஏழு கட்சிகளின் கடன் முதலான பொறுப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன. 2004-05ஆம் ஆண்டில் ரூ.8 கோடியாக இருந்த காங்கிரஸின் கடன் முதலான பொறுப்புகள் 2014-15ஆம் ஆண்டில் 4000 மடங்கு அதிகரித்து ரூ.329.43 கோடியாக உயர்ந்துள்ளது. பாஜகவைப் பொறுத்தவரை இது ரூ.24.99 கோடியாக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை: