செவ்வாய், 17 அக்டோபர், 2017

மெர்சல் ! கிராபிக்ஸ் காளைகள் திரையில் மட்டும்தான் சீறிப் பாயும், வாடிவாசல் காத்திருக்கலாமா?

கிராபிக்ஸ் காளைகளுக்காக வாடிவாசலில் காத்திருக்கக்கூடாது!minnambalam ரவிக்குமார்.:- விலங்குகளை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெறும் திரைப்படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறவேண்டுமென்றால் விலங்குகள் நல வாரியத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும் என்ற பிரிவை திரைப்பட தணிக்கை விதிகளில் பாஜக அரசு சேர்த்துள்ளது.
நிஜமான விலங்குகளைப் பயன்படுத்தாமல் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சிகள் உருவாக்கப்பட்டால் அந்தப் படங்களுக்கும் விலங்குகள் நல வாரிய அனுமதி தேவையா என்பதைப்பற்றி திரைப்பட தணிக்கைச் சட்டத்திலோ, புதிய விதிகளிலோ எதுவும் கூறப்படவில்லை.
பெண்கள் நடித்த காட்சிகள் இருந்தால் மகளிர் ஆணையத்திடமும், குழந்தைகள் நடித்த காட்சிகள் இருந்தால் குழந்தைகள் நல ஆணையத்திடமும் தனியே தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும் என்றும் இனி கூறுவார்களா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

சென்சார் போர்டுக்குமேல் விலங்குகள் நல வாரியம் என்ற சூப்பர் சென்சார் போர்டு எதற்கு? முதலமைச்சர் கனவில் கட்சி தொடங்குவதற்காகக் கணக்கு போட்டுக்கொண்டிருக்கும் நடிகர்கள் ஏன் இந்தக் கேள்வியை எழுப்பவில்லை?
இந்த விதியைக் காட்டி தனது படத்துக்கு சான்றிதழ் தராமல் இழுத்தடித்ததை அந்தப் படத்தின் ஹீரோ ஏன் கண்டிக்கவில்லை?
இதிலிருந்து நாம் அறியும் நீதி இதுதான்:
கிராபிக்ஸ் காளைகள் திரையில் மட்டும்தான் சீறிப் பாயும், அவற்றுக்காக வாடிவாசலில் நாம் காத்திருக்கக்கூடாது.

கருத்துகள் இல்லை: