வியாழன், 19 அக்டோபர், 2017

கனடா . இஸ்லாமிய பெண்களின் நிக்கப், ஹிஜாப் (முகத்திரை) பொது இடங்களில் தடை !

தினமலர் தினமலர் ::மாண்ட்ரில்: கனடாவின் கியூபெக் மாநிலத்தில் முஸ்லிம் பெண்களும் பிற தனியார்களும் பொது போக்குவரத்துக்களான ரயில் பேருந்து ஆகியவற்றில் முகத்திரை அணிந்து கொண்டு பயணம் செய்யக்கூடாது. அரசு சேவை அலுவலகங்களுக்கும் முகத்திரை அணிந்து கொண்டு செல்லக்கூடாது என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.கனடா நாட்டின் 10 மாகாணங்களில் ஒன்றான கியூபெக்கில் முஸ்லிம் பெண்களும் பிற தனியார்களும் பர்தா அணிந்து கொண்டு வெளியே வருவதை தடை செய்யும் 62 வது மசோதா புதனன்று மாநில சட்டப் பேரவையில் இயற்றப்பட்டது. மொத்தம் உள்ள 65 உறுப்பினர்களில் 51 உறுப்பினர்கள் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த சட்டம் மாநில ஆளுநரின் ஒப்புதலை பெற்ற பிறகு தான் சட்டமாக அமல் செய்யப்படும். இந்த சட்டம் அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், பொது சுகாதாரத் துறையைச் சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ரயில் பேருந்து ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தினரையும் அச்சுறுத்துவதற்கோ கொடுமை படுத்துவதற்கோ இந்த மசோதா இயற்றப்படவில்லை. அதற்குப்பதிலாக எல்லா மதத்தினரும் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என மாநில நீதித்துறை அமைச்சர் ஸ்டீபானி வேலி கூறினார். தனிப்பட்டவர்கள் இந்த சட்ட விதியிலிருந்து தங்களுக்கு விதிவிலக்கு வேண்டும் என்று கோரி பெறலாம். மத அடிப்படையில் தங்களுக்கு விதிவிலக்கு தேவை என அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால் தங்களை குறிவைத்துதான் இந்த சட்டம் இயற்றப்பட்டது என கனடா முஸ்லிம் பெண்கள் கவுன்சில் உறுப்பினர் ஷகீன் அஷ்ரப் கூறினார்.

கருத்துகள் இல்லை: