சனி, 21 அக்டோபர், 2017

மெர்சல் என்றால் என்ன? மிரட்டல்... மிரசல்.. மெர்சல் ?

Surya Xavier : மெர்சல் என்ற சொல் எந்த மொழியைச் சார்ந்தது என்ற விவாதம் முகநூலில் போகிறது
இது முற்றிலும் திரிந்த தமிழ்ச் சொல் தான்.
தமிழில் ஒரு வினைச் சொல் முக்காலத்துக்கும் பொருந்துவதற்கு அந்தச் சொல்லோடு கடைசியாக சல் எனும் விகுதியைச் சேர்ப்பார்கள்
உதாரணத்திற்கு
கரல்+சல்=கரசல் சத்தம் போடுதல்
இதைத்தான் சண்டை போடுபவனைப் பார்த்து கரச்சப் பண்ணுறான் என்பார்கள்.
திரல்+சல் =திரசல் திரண்டல்
பால் கெட்டுப் போனால் தெரஞ்சு போச்சு என்பது இதுதான்
தரல்+சல்= தரசல் கொடுத்தல் பெறுதல் என்று பெயர். தரவுகள் என்பது இது
வரல் +சல் = வரசல் வருவது என்று பொருள்.வெரசலா வா என்பார்களே அதுதான்
வெரசலா என்றால் விரைந்து வா என்பதே
இதே போல மிரல் + சல் =மிரசல் மிரண்டு போவது, அதிர்ச்சி அடைவது,பிரமிப்பது என்று பொருள்

மிரசல் என்ற தமிழச்சொல் சென்னை தமிழோடு கலந்து மெர்சல் என்று மாறியது
மெர்சல் என்ற இந்த டைட்டில் எழுதியிருப்பதை உன்னிப்பாகக் கவனித்தால் முதலில் ஒரு காளையின் முகம்,திமில் கடைசியாக வால் மிரட்டுவது போல் இருப்பதைக் காணலாம்
காளையின் முகமும் திமிலும் சேர்ந்து விஜயின் 61 வது படம் என்பதை குறிக்கும் வகையிலும் இருக்கும்
அந்த எழுத்தை தலை குப்புற கவிழ்த்துப் பார்த்தால் விஜய் என்ற பெயர் தெரியும்
பதிவு எப்புடி மெர்சலா இருக்கான்னு நீங்க தான் சொல்லணும்
எனது அன்பு உறவினரும்
மலேசியப் பல்கலைக்கழகத்தின்
தமிழ் பேராசிரியையுமான வீரலட்சுமி கேட்டுக் கொணடதற்கிணங்க இந்தப் பதிவு
Veeralakshmi Saravanajothi

கருத்துகள் இல்லை: