ஞாயிறு, 15 அக்டோபர், 2017

நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள்’ ஐயப்பம் கோவில் கோபாலகிருஷ்ணன் ..


நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள் என திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம், தென் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதை விசாரித்து வந்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோரை கொண்ட அமர்வு, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

மேலும் அரசியல் சாசன அமர்வின் பரிசீலனைக்கு சில அம்சங்களையும் நீதிபதிகள் முன்வைத்தனர். பாதுகாப்பு சவால். சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவு குறித்து கூறும்போது பெண்களுக்கு எதிராக சில கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.


அவர் கூறியிருப்பதாவது:-< சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது என்பது பாரம்பரியத்துடன், பாதுகாப்பும் சார்ந்த பிரச்சினை ஆகும். மலையில் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது மிகவும் சவாலானது. இதனால்தான் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை நாங்கள் அனுமதிக்கவில்லை.< அனுமதிக்க முடியாது< இதில் தனிப்பட்ட விஷயம் எதுவும் இல்லை. பாதுகாப்பும், சடங்குகளும் சம அளவில் முக்கியமானது. இவற்றை நாம் ஒன்றாகவே பார்க்க வேண்டும். இந்த மலைக்கோவிலை சுற்றுலா தலமாக மாற்ற முடியாது. சபரிமலையை தாய்லாந்தாக மாற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மேற்படி வயது கொண்ட பெண்களை சபரிமலையில் அனுமதிக்க முடியாது.

இந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கினால்கூட நல்ல குடும்பத்தில் பிறந்த, சுயமரியாதை கொண்ட பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள்.

இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.

மந்திரி கண்டனம்

கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கும் இந்த கருத்துக்கு மாநில தேவசம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார். கோபாலகிருஷ்ணனின் இந்த கருத்து பெண்களை அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ள அவர், இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசானது, கோவில்களில் நுழைவதில் பாலின பாகுபாடு கூடாது என்ற கருத்தை கொண்டுள்ளது. இது தொடர்பாக கோர்ட்டு தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம்’ என்றார். 

கருத்துகள் இல்லை: