ஞாயிறு, 7 மே, 2017

அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் இலங்கை திரும்ப ஆர்வம் .. மனுக்கள் குவிகிறது!

சிவகங்கை: தமிழக முகாம்களில் உள்ள  இலங்கை தமிழர்கள்  தங்கள் நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்து, அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். 119 முகாம்கள்இலங்கையில், 1983ல், உள்நாட்டு போர் துவங்கியதில் இருந்து தமிழர்கள்  இந்தியா வரத் துவங்கினர். தமிழகத்தில், 119 முகாம்களில், 67 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். இதுதவிர, போலீசார் அனுமதியுடன், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் உள்ளனர். 2009 மே மாதம், உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததும், ஒரே சமயத்தில், 5,000 பேர் இலங்கைக்கு சென்றனர். வேலைவாய்ப்புதற்போது, இலங்கையில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாலும், அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதாலும், தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல, இலங்கை தமிழர்கள்  ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இவர்களெல்லாம் ஆசைப்பட்டு போக நினைக்கவில்லை அகதிகளுக்கு மத்திய மாநில அரசுகள் கொடுக்கும் அநியாயத் தொல்லை பொறுக்காமல் தான் போகிறார்கள் இன்னும் கூட பல அரசு அதிகாரிகள் இவர்களை தீவிரவாதிகள் போல் பார்க்கிறார்கள் அகதிகள் முகாம் என்ற பெயரில் கொடுமையான சிறைவாசம் இங்கேயே பிறந்த வளர்ந்த தலைமுறைக்கும் வேலை வாய்ப்பு கிடையாது டிரைவிங் லைசென்ஸ் கிடையாது உயர்கல்வி வசதி மறுக்கப்படுகிறது இன்னும் பல சலுகைகள் கிடையாது எனவே இந்த மனிதாபிமானம் இல்லாத இந்திய அரசை வெறுத்து  வெளியேற முயற்சிக்கிறார்கள்
சமீபத்தில், 46 பேர் இலங்கைக்கு சென்றனர். அதே போல், ஏராளமானோர் தங்கள் நாட்டிற்கு செல்ல தொடர்ந்து விண்ணப்பம் அளித்து வருகின்றனர். இதில், 2006க்கு பின் வந்தோர் தான், தாயகம் செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தினமலர்


கருத்துகள் இல்லை: