ஞாயிறு, 7 மே, 2017

டாஸ்மாக் ! பெண்கள் ஆவேசம்: எந்த சேதாரமும் இல்ல... அப்படியே போயிடுங்க... திரும்பி வந்தா... தரைமட்டம்தான்

''டாஸ்மாக் கடைய வைக்கக் கூடாதுன்னு வலியுறுத்தி மறியல் பண்ணுனாலும், டாஸ்மாக் கடைக்கு முன்னாடி கத்தினாலும் கைது செய்யுது போலீசு. தமிழகம் பூரா அப்படித்தான் நடக்குது. நாம கடந்த 3 நாளா போராடுறோம். எந்த அதிகாரியும் இதை கண்டுக்கல. அதனால இப்ப நாம உடனே ஏதாவது செய்யணும்’’ என பேசிக்கொண்ட பெண்கள், திடீரென ஆவேசம் அடைந்து டாஸ்மாக் கடையின் பூட்டை சுத்தி மற்றும் கடப்பாரையுடன் வந்து உடைத்து, கடையின் உள்ளே இருந்த மதுபான பெட்டிகளை சேதப்படுத்தாமல் அப்படியே தூக்கிக்கொண்டு செந்துறை - ஜெயங்கொண்டம் பிரதான சாலையில் வைத்து மறியல் செய்தனர்>விஷயத்தை அறிந்த டாஸ்மாக் ஊழியர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ''ஒரு பாட்டில கூட நாங்க உடைக்கல. இங்க இருக்கிறதோட (மதுபானங்கள்) மதிப்பு எவ்வளவு?'' என்று பெண்கள் கேட்டனர்.&t;">அதற்கு டாஸ்மாக் ஊழியர்கள், ''ரூபாய் 11 லட்சம்'' என்று தெரிவித்தனர்.;">''நாங்க என்ன செய்யுறோமுன்னா, ஒரு பாட்டில கூட உடைக்காம, எந்த சேதாரமும் இல்லாம, அப்படியே எல்லா பாட்டிலேயும் கொடுத்துடுறோம், நீங்க அப்படியே எடுத்துக்கிட்டு வேற எங்கயாச்சும் போயிடுங்க. ஆனா.. திரும்பி வந்தீங்கன்னா, இனி கடை தரைமட்டம்தான்..'' என எச்சரித்தனர் பெண்கள்.
எந்த பதிலும் பேசாமல் அனைத்து மதுபானங்களையும் வாகனம் ஒன்றில் ஏற்றி அருகில் உள்ள ஆர்.எஸ்.மாத்தூர் கடைக்கு சென்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய அலுவலகம் அருகே நெடுஞ்சாலையில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை சுப்ரீம்கோர்ட் உத்தரவுபடி அகற்றப்பட்டது. 
இந்த கடையை செந்துறை ராயல்சிட்டி குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தனியார் கட்டிடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென நள்ளிரவில் அதிகாரிகள் திறந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த மே 5ஆம் தேதி முதல் கடையை திறக்கவிடாமல் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இன்று திடீரென மேற்கண்ட போராட்டத்தை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.

">இருதரப்புக்கும் சேதாராம் இல்லாமல் போராட்டம் நடத்திய இந்தப் பெண்கள் புதுமைப் பெண்கள்தான்.">-எஸ்.பி.சேகர்  நக்கீரன்

கருத்துகள் இல்லை: