திங்கள், 13 ஜனவரி, 2014

மகள்களை பிரிந்து எப்படி வாழ்வேன்? தேவயானி கண்ணீர்

புதுடில்லி : 'என்னை விட்டு பிரிந்து, என் மகள்கள், அமெரிக்காவில் எப்படி வசிப்பரோ, என நினைக்கும்போது, துக்கம் தொண்டையை அடைக்கிறது' என, அமெரிக்க அரசால் வெளியேற்றப்பட்ட, தூதரக அதிகாரி தேவயானி, பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். 'விசா' மோசடியாம்;அமெரிக்காவில், இந்திய தூதரகத்தில் பணியாற்றிய தேவயானி, விசா மோசடியில் ஈடுபட்டதாக, அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரின் உடைகளை களைந்து, போலீசார் சோதனையிட்டனர்.
இந்த விவகாரம், இந்தியாவில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தியா திரும்பிய தேவயானி, பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி:எனக்கு, 7 மற்றும் 4 வயதுகளில், இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள், அங்குள்ள பள்ளியில் படிக்கின்றனர். அவர்களை பிரிந்து, வாழ்ந்ததே இல்லை. என் கணவரும், அமெரிக்காவில் தான் பணியாற்றுகிறார்.தற்போது, என் மகள்கள், தொடர்ந்து அமெரிக்காவில் தான் படிக்க வேண்டும் என்றும், தான் தொடர்ந்து, அமெரிக்காவில் தான், பணியாற்ற வேண்டும் என்றும், என் கணவர் விரும்பினால், என் நிலைமை என்ன என்றே தெரியவில்லை.
 அம்மணி பேச்சில் அந்த ஏழை பனி பெண்ணிடம் தவறாக -கீழ்த்தரமாக நடந்து கொண்டது பற்றி எந்த கவலையும் இல்லையே ..இந்தியாவில் தன் இஷ்டம் போல அரசையும் சட்டத்தையும் ஆட்டிபடைப்பதுபோலவே அமெரிக்காவிலும் நடக்கவேண்டும் என்றால் இவர் அறியாமையை என்னவென்பது ..பனி பெண்ணுக்கும் குடும்பம் ,குழந்தைகள் உண்டு என்பதையும் அவர்களை மனிதாபமான முறையில் நடத்தவேண்டும் என்ற அடிப்படை மனம் இல்லாத இந்த மெத்த படித்த மேதாவிக்கு தெரிய நாயமில்லை


நேர்மையானவள்>மீண்டும், என் குழந்தைகள், கணவருடன், ஒன்றாக வசிக்க முடியாதோ என்ற நினைப்பு, என்னை வாட்டுகிறது. நான், நேர்மையானவள் என்று, எனக்கு தெரியும்.தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையிலிருந்து, மீண்டு வருவேன். ஆனால், அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. அதுவரை, என் மகள்கள், என்னை பிரிந்து, எப்படி வாழ்வர்? இதை நினைக்கும்போது, துக்கம் தொண்டையை அடைக்கிறது.இந்தியா திரும்பியதும், என் மகள்களுடன், தொலைபேசியில் பேசினேன். அப்போது, என், சிறிய மகள், 'அம்மா, எப்போது வீட்டுக்கு வருவாய்' என, கேட்டாள். அவளுக்கு எப்படி பதில் சொல்வதென்றே தெரியவில்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: