திங்கள், 13 ஜனவரி, 2014

அன்னிய செலாவணி மோசடி: கனிமொழி மீது குற்றப்பத்திரிகை- சொலிசிட்டர் ஜெனரல் திடீர் பரிந்துரை


டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரண் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் ரூ200 கோடியை கலைஞர் டிவி பெற்றது என்ற குற்றச்சாட்டில் அதன் பங்குதாரராக இருந்த கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் விடுதலையானார். அன்னிய செலாவணி மோசடி: கனிமொழி மீது குற்றப்பத்திரிகை- சொலிசிட்டர் ஜெனரல் திடீர் பரிந்துரை இது தொடர்பான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  தந்தை பெரியாருக்கு பின்பு கனிமொழியை கண்டுதான் அவர்கள் அதிகம் பயபடுகிறார்கள்  என்பது தெளிவாக தெரிகிறது இதுதான் உண்மை ! இந்த வழக்கில் கலைஞர் டிவியின் மற்றொரு பங்குதாரரரும் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் டிவி ரூ200 கோடி பெற்ற விவகாரத்தில் அன்னிய செலாவணி மோசடி பிரிவுகளின் கீழ் அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. அத்துடன் இந்த வழக்கில் கனிமொழிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் திட்டமிட்டிருந்தது. ஆனால் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியாகியுள்ள செய்தியில், கனிமொழி மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தேவையில்லை என்று கடந்த ஜூலை 27ம் தேதி சொலிசிட்டர் ஜெனரல் பராசரன் அமலாக்கப் பிரிவிடம் தெரிவித்திருந்தார். பின்னர் டிசம்பர் 18ம் தேதியன்று அனுப்பிய கடிதத்தில் தமது முந்தைய நிலையை தாம் மாற்றிக் கொள்வதாகவும் அமலாக்கப் பிரிவு உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று சொலிசிட்டர் ஜெனரல் பராசரண் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கனிமொழி மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடும் என்று தெரிகிறது. அப்படி அன்னிய செலாவணி மோசடி பிரிவின் கீழ் கனிமொழிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் அவரது சொத்துகள் பறிமுதல் செய்யவும் நேரிடும் என்று எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: