விஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சியின் மாநாடு, விழுப்புரம் மாவட்டம்,
உளுந்தூர்பேட்டையில், பிப்., 2ம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில், லோக்சபா
தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம்,
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கருத்து கேட்கவுள்ளார்.மாநாட்டிற்கு, 'ஊழல் ஒழிப்பு மாநாடு' என, பெயரிடப்பட்டு உள்ளது. மேலும், 'ஒன்றுபடுவோம்; ஊழலை ஒழிப்போம்' என்ற வாசகமும், ஒற்றை விரல் லச்சினையும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது : இதுதொடர்பாக, சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் இளைஞர் அணி செயலர், சுதீஷ் கூறியதாவது: அ.தி.மு.க., நல்லாட்சி தரும் என்று கருதியே, அக்கட்சியுடன், சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்தோம். அடடா உங்க படத்தில கூட இந்த மாதிரி ஒரு ஒரிஜினல் ஜோக் சொன்னதில்லையே ?
இதற்காக, மாநாடு ஒன்றை நடத்தி, கட்சி தொண்டர்களிடம், விஜயகாந்த் கருத்து கேட்டார். ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, அ.தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும், ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்பதற்காக, உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள, தே.மு.தி.க., மாநாட்டிற்கு, 'ஊழல் ஒழிப்பு மாநாடு' என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் கருத்து கேட்பார். வரவேற்பை பெறும்:
மாநாட்டிற்கான வாசகம் மற்றும் லச்சினையில், ஊழல் ஒழிப்பு கொள்கையை, தே.மு.தி.க., முன்வைத்துள்ளதால், பா.ஜ.,வுடன் தான், அந்தக் கட்சி கூட்டணி வைக்கும் என்பதை உறுதி செய்வது போல உள்ளது
இதுகுறித்து, அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறியதாவது: மத்தியில் ஆட்சியில் உள்ள, காங்., அரசு மீது, பல ஊழல் புகார்கள் உள்ளன. இந்த ஊழல்கள் பற்றி பிரசாரம் செய்தே, டில்லியில், 'ஆம் ஆத்மி' கட்சி ஆட்சியை பிடித்தது. பா.ஜ.,வும், அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், காங்கிரசுக்கு எதிரான ஊழல் புகார்களை, பொதுக்கூட்டங்களில் எல்லாம், பட்டியலிட்டு வருகின்றனர். பல ஊழல்கள்:
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.கம
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக