திங்கள், 13 ஜனவரி, 2014

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ரூ.15 லட்சத்தில் குளுகுளு வேன்



திருச்சி: ஜல்லிக்கட்டு காளைகளை, சொகுசாக கொண்டு செல்லும் வகையில், "ஏசி' வசதி செய்யப்பட்ட, நவீன வேன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஜல்லிக்கட்டு, உச்ச நீதிமன்ற "கிடுக்கிப்பிடி'யால், சில இடங்களில் மட்டுமே நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு சீசன் துவங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு, காளைகளை சொகுசாக கொண்டு செல்ல, தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம், "ஏசி' வேனை தயாரித்துள்ளது.
5 காளைகளுக்கு...: பதினைந்து லட்சம் ரூபாய் செலவில், தயாராகியுள்ள வேனில், ஐந்து காளை
களை கொண்டு செல்லவும், பின்னால், ஆட்கள் உட்கார்ந்து செல்லவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க நிர்வாகி, ராஜா மணிகண்டன் கூறியதாவது:பிராணிகளை வதைக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுஉள்ளது. அதை பின்பற்றித் தான், வேன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வேனில், "ஏசி' வசதியும், காளைகள் படுத்துச் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் அலுப்பு ஏற்படாது. வேன் உள்ளேயே உணவு கொடுக்கும் வசதி உள்ளதால், ஜல்லிக்கட்டில் அவை தெம்புடன் பங்கேற்க முடியும்.


தமிழகத்தில் முதல்முறை : காளைகளை, வீடுகளில் பிள்ளை களைபோல் தான் வளர்த்து வருகி றோம். அதனால் தான், இவ்வளவு செலவு செய்து வேன் தயாரிக்கப்பட்டுஉள்ளது. தமிழகத்தில், முதன் முறையாக, இந்த வகை வேன் தயார் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க கவுரவ தலைவர், அமைச்சர் செந்தில் தொண்டைமான், திருச்சியில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இதற்காக, குழுமாயி அம்மன் கோவில் பகுதியில் நீச்சல் குளத்துடன் கூடிய பயிற்சி மைதானம், கொசுவலை, பேன் வசதியுடன் கூடிய தொழுவம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தான், அவருடைய ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. dinamalar.com

கருத்துகள் இல்லை: