திங்கள், 13 ஜனவரி, 2014

கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்?

உத்தர பிரதேச மாநிலம், ஒரு காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. அந்த மாநிலத்தில் இருந்துதான், காங்கிரசுக்கு, அதிக அளவில், எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் வளர்ச்சிக்குப் பின், உ.பி.,யில் காங்கிரஸ் பலவீனம் அடைந்து விட்டது. இருந்தாலும், அங்கு கட்சியை வலுப்படுத்த, ராகுல் தீவிர பிரயத்தனம் செய்து வருகிறார்.அமேதி தொகுதியை விட...கடந்த லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், வரும் தேர்தலில், தொகுதி மாறி போட்டியிட
விரும்புகிறார். அதற்கு, அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சியைச் சேர்ந்த, குமார் விஷ்வாஸ், அவரை எதிர்த்து, அமேதி தொகுதியில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது உட்பட, பல காரணங்கள் கூறப்படுகின்றன.மேலும், அமேதி தொகுதியை விட, வேறு தொகுதியை ராகுல் தேர்வு செய்தால், அவருக்கான வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கும் என, உளவுத் துறையும் தகவல் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
சங்கரன் கிருஷ்ண மூர்த்தி - திருச்சிராப்பள்ளி
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வெற்றி உறுதி. அந்த மாவட்டத்தில் இருக்கும் மக்கள் சர்ச் நிர்வாகம் கைகாட்டுபவர்களுக்கே வாக்களிப்பார்கள். மதசார்பின்மை கருதி இந்த பதிவு வெளியிடபடாமல் போகலாம்.
அதனால், தனக்கு சாதகமான தொகுதியை கணடுஅறியும்படி, கட்சியில் தனக்கு நம்பிக்கைஆன, சில தலைவர்களிடம், ராகுல் தெரிவித்துள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோடிக்கு ஆதரவான அலை:உ.பி.,யை தவிர, வேறு மாநிலத்தில் போட்டியிடுவதன் மூலம், அந்த மாநிலத்தில், கட்சியை வளர்க்க முடியும் என்பதும், ராகுலின் கணிப்பு. ராகுலின் உத்தரவை அடுத்து, மகாராஷ்டிராவில் அவரை போட்டியிட வைக்கலாம் என, கட்சியினர் திட்டமிட்டனர்.ஆனால், ராகுலின் ஆலோசகர்களோ, 'வரும், லோக்சபா தேர்தல் எந்த அளவுக்கு, காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் என, சொல்ல முடியாது. மகாராஷ்டிராவில், பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சிகள் செல்வாக்குடையவை. மோடிக்கு ஆதரவான அலை, அங்கு வீசி விட்டால், காங்கிரஸ் நிலைமை மோசமாகி விடும். அதனால், வேறு ஒரு மாநில தொகுதியை, ராகுலுக்கு தேர்வு செய்வதே சரியாக இருக்கும்' என, கூறி விட்டனர்.இதன்பின், 'கர்நாடகாவில், சிக்மகளூர் தொகுதியில் போட்டியிடலாம்' என, மற்றொரு தரப்பில், யோசனை கூறப்பட்டுள்ளது. பா.ஜ.,விலிருந்து வெளியேறி, தனிக்கட்சி துவக்கிய எடியூரப்பா, மீண்டும், தாய்க்கட்சிக்கு வந்து விட்டதால், அங்கும் பா.ஜ., அலை வீசிவிடலாம் என, அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயக்கம் காட்டவே, ராகுலின் பார்வை தமிழகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது.

சாதகமானது தமிழகம்?இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:உ.பி., மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு இருக்குமா என, ராகுல் அஞ்சுகிறார். இருந்தாலும், அந்த தொகுதியை விட முடியாது என்பதால், அந்தத் தொகுதிஉடன், மற்றொரு தொகுதியிலும் போட்டியிட விரும்புகிறார் அந்த வகையில், கர்நாடகாவின் சிக்மகளூரை விட, தமிழகத்தில், ஒரு தொகுதியில் போட்டிஇடுவதே சாதகமானது என, அவருக்கு சொல்லப்பட்டிருக்கிறது அதனால், அவரும், தமிழகத்தில் போட்டியிட சரியான தொகுதியை தேர்வு செய்து தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.நாங்களும், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திண்டுக்கல் என, சில தொகுதிகளை பரிந்துரைத்துள்ளோம். இதில், முதல் முன்னுரிமையை கன்னியாகுமரிக்கு கொடுக்கும்படி வலியுறுத்திஉள்ளோம்.அதற்கு காரணம், 2011 சட்டசபை தேர்தலில், கன்னியாகுமரி லோக்சபாவுக்கு உட்பட்ட, ஆறு சட்டமன்ற தொகுதிகளில், விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் மூன்று தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்றதே. அதேநேரத்தில், தேர்தலுக்கு முன், கூட்டணியை முடிவு செய்யும்படியும், ராகுலிடம் கூறியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: