திங்கள், 13 ஜனவரி, 2014

திமுக 25, தேமுதிக 8 + ராஜ்யசபா, காங்கிரஸ் 7 தொகுதிகள் ஒதுக்கீடு?


திமுக 25, தேமுதிக 8 ப்ளஸ் ராஜ்யசபா, காங்கிரஸ் 7 தொகுதிகள் ஒதுக்கீடு?சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக 25 தொகுதிகள், தேமுதிக 8 , காங்கிரஸ் 7 தொகுதிகளில் போட்டியிடுவது என்ற உடன்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடை பெற்றன.


பின்னர் அழகிரியின் எதிர்ப்பால் தேமுதிக பிரேக் போட்டது. இந்நிலையில் திடீரென மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், கருணாநிதியை சந்தித்து பேச களநிலைமை மாறியது.
திருமா சந்திப்பு
இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், விஜயகாந்தை சந்தித்தார்.
அப்போது தி.மு.க. கூட்டணியில் சேர வலியுறுத்தினார் திருமாவளவன். அதற்கு பதில் அளித்த விஜயகாந்த் 2-ந்தேதி உளுந்தூர்பேட்டையில் நடக்கும் தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஓரணியில் திமுக- காங்கிரஸ்- தேமுதிக
தற்போதைய சூழலில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. ஆகிய 3 கட்சிகளும் இணைந்து ஒரே அணியாக போட்டியிடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கின்றன. எத்தனை இடங்கள் என்பது பற்றி தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகின்றன.
திமுகவுக்கு 25
தி.மு.க. 25 இடங்களில் போட்டியிடுவது என்று முடிவு எடுத்துள்ளது என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.
தேமுதிகவுக்கு 8 ப்ளஸ் 1
தேமுதிகவுக்கு 8 தொகுதிகளை கொடுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. அதோடு ஒரு ராஜ்யசபா இடமும் தே.மு.தி.க.வுக்கு வழங்க திமுக முன் வந்துள்ளதாம்
காங்கிரஸுக்கு 7
காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. 2009 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தது. இதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: