வியாழன், 16 ஜனவரி, 2014

பிரதமர் வேட்பாளர்: ராகுலுக்கு காங்கிரசில் கடும் எதிர்ப்பு?

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க காங்கிரசில் கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. இதனால் ராகுலை பிரதமர் வேட்பாளராக எதிர்க்க விரும்பாதவர்கள் கட்சியை விட்டு வெளியே போகலாம் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் 2014 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவக் கூடும் என்பதால் ராகுல் மீது பழிவிழுந்துவிடும் என்பதால் அவரது ஆதரவாளர்கள் ராகுலை பிரதமர் வேட்பாளராக்க கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் வேட்பாளர்: ராகுலுக்கு காங்கிரசில் கடும் எதிர்ப்பு? அதே நேரத்தில் சில மூத்த தலைவர்கள், ராகுலை பிரதமர் வேட்பாளராக்க எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், ராகுலுடன் இணைந்து பணியாற்ற முடியாதவர்கள் காங்கிரஸை விட்டு வெளியே போகலாம் என்று கூறியிருக்கிறார்.
tamil.oneindia

கருத்துகள் இல்லை: