திங்கள், 13 ஜனவரி, 2014

ஆம் ஆத்மி :வதேரா மீதான நிலபேர ஊழல் புகார் சுதந்திரமாக விசாரிக்கப்படவேண்டும்

சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா, தனது செல்வாக்கை பயன்படுத்தி அரியானா மாநிலத்தில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் ஆதரவுடன் குறைந்த விலைக்கு நிலங்கள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. ராபர்ட் வதேரா, டி.எல்.எப். கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ரூ.65 கோடி வட்டியில்லாமல் கடன் வாங்கியதாகவும் சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். ஆனால், இந்த நிலபேர விவகாரத்தில் சில மாற்றங்களை செய்வதற்கு அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த அஷோக் கெம்கா மறுத்தார். இதையடுத்து காங்கிரஸ் அரசு தனக்கு நெருக்கடி கொடுப்பதாக அஷோக் கெம்கா குற்றம் சாட்டினார். ஆனால், இதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என்று முதல்வர் ஹூடா அறிவித்தார்.
பின்னர் பதவியை துறந்த அஷோக் கெம்கா, தற்போது ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், அரியானா மாநிலத்தின் சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இதன் பொறுப்பாளராக உள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திரா யாதவ், வதேரா விவகாரம் குறித்து கூறியதாவது:- அரியானா மாநிலத்தில் ராபர்ட் வதேராவின் நிலபேரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவேண்டும். வதேராவின் நிலம் சம்பந்தப்பட்ட ஊழல் அரியானாவில் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே வதேராவிற்கு எதிரான விசாரணையில் எந்த குறுக்கீடும் இருக்கக்கூடாது .maalaimalar.com

கருத்துகள் இல்லை: