ஞாயிறு, 8 டிசம்பர், 2013

ராஜ்யசபா எம்.பி.,க்களில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்: 17 சதவீதம் பேர் குற்ற பின்னணி உடையவர்கள்

ராஜ்யசபா எம்.பி.,க்களில், 67 சதவீதம் பேர், கோடீஸ்வரர்கள் என்றும், 17 சதவீதம் பேர், குற்றப் பின்னணி உடையவர்கள் என்றும், தகவல் வெளியாகி உள்ளது. 'ஜனநாயகத்துக்கான சீர்திருத்தம்' என்ற, தன்னார்வ அமைப்பு, ராஜ்யசபா எம்.பி.,க் களை பற்றிய, தகவல்களை சேகரித்து, அதன் விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: ராஜ்யசபாவில், 245 உறுப்பினர்கள் உள்ளனர்; இவர்களில், 12 பேர், நியமன உறுப்பினர்கள். ராஜ்யசபா உறுப்பினர்கள், தேர்தலின்போது, தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள, சொத்து மற்றும் அவர்களின் விவரங்களை சேகரித்தோம். இதன்படி, மொத்த உறுப்பினர்களில், 67 சதவீதம் பேர், கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவர்களின், சராசரி சொத்து மதிப்பு, 20 கோடி ரூபாய். காங்கிரஸ் எம்.பி.,க்களின், சராசரி சொத்து மதிப்பு, 16 கோடி ரூபாய். பா.ஜ., எம்.பி.,க்களின் சொத்து மதிப்பு, 8 கோடி ரூபாய். பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்களுக்கு, சராசரியாக, 13 கோடி ரூபாயாகவும், மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களுக்கு, சராசரியாக, 40 லட்சம் ரூபாயாகவும், சொத்து மதிப்பு உள்ளது  1967ல் தமிழக தேர்தல் மூலம் அழித்தொழிக்கப்பட்ட ஆண்டான் அடிமைத்தனம் மீண்டும் நிலை பெற்று விட்ட


615 கோடி:
ராஜ்யசபா எம்.பி.,க்களில், அதிகபட்சமாக, ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த, மகேந்திர பிரசாத்துக்கு, 683 கோடி ரூபாய் சொத்து உள்ளது. சுயேச்சை எம்.பி.,யான, மதுபான நிறுவன அதிபர், விஜய் மல்லையாவுக்கு, 615 கோடி ரூபாயும், சமாஜ்வாதி கட்சி எம்.பி.,யும், நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகையுமான, ஜெயா பச்சனுக்கு, 493 கோடி ரூபாயும் சொத்துகள் உள்ளன. ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள, 38 பேர், தங்கள் மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்; இது, மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில், 17 சதவீதம்; இவர்களில், 15 பேர், கொடிய குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள். பகுஜன் சமாஜ் எம்.பி., பாகெல் மீது, கொலை முயற்சி வழக்கு உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த, எம்.பி., ஒருவர் மீது, தேர்தல் வழக்கு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை: