திருவனந்தபுரம், டிச.13- கேரளாவில் உள்ள
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநி லங்களில்
இருந்தும் பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி செல்கி றார்கள். இவர்களில்
பெரும்பாலானவர்கள் பம்பையில் இருந்து நடந்தே சபரிமலை செல் வது வழக்கம்.
அவ்வாறு போகும்போது மலை யில் ஏறும்போது ஏற்படும் ரத்த அழுத்தம்
காரணமாகவும் உடல் நலக்குறைவு ஏற்படுவது வழக்கம். அவர்களுக்கு சிகிச்சை
அளிக்க பெருவழி நடை பாதை முழுவதும் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள்
அமைக்கப்பட்டு நோய் வாய்ப்படும் பக்தர்களுக்கு உடனே முதல்உதவி சிகிச்சை
அளிக்கப்பட்டு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பெரிய மருத்துவ மனைகளுக்கு அனுப்பி
வைக்கப்படுவார்கள்.
இம்முறை சபரி மலையில் கோவில் நடை திறந்த
பின்பு வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு வந்த வண்ணம்
உள்ள னர். ஆனால் எப்போதும் இருப்பதை விட இம் முறை கேரளாவில் பருவ மழையும்,
குளிரும் நில வியதால் பக்தர்கள் பல ரும் பாதிக்கப்பட்டனர்.
நெஞ்சுவலி ஏற்பட் டும், மூச்சுதிணறலாலும்
பாதிக்கப்பட்ட அவர் களுக்கு அய்யப்ப சேவா சங்கத்தினர் முதலுதவி அளித்து
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் இது வரை 19 பேர் இறந்து
விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள்
2 பேர் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பலியாகி விட்டனர்.
இவர்களின் உடல் களை அய்யப்ப சேவா சங்கத்தினர் அவரவர் ஊர்களுக்கு எடுத்து சென்று உறவினர்களி டம் ஒப்படைத்தனர்.
மின்னல் தாக்கி கோபுரம் தூள்! மதுரை
மாநகரில் நேற்று இரவு 9 மணி யளவில் இடி-மின்ன லுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது மின் னல் தாக்கியதில் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில்
சேதம் ஏற் பட்டது.
கிழக்கு ராஜ கோபுரத்தின் உச்சியில் இருந்த
வடக்கு நாசி தலத்தின் ஒரு பகுதியை மின்னல் தாக்கியது. இதனால் அதன் ஒரு
பகுதி கீழே விழுந்தது. தகவலறிந்த கோவில் இணை ஆணையர் செய ராமன் மற்றும் அதி
காரிகள் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். கிழக்கு
கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களி லும் இடிதாங்கி பொருத் தப்பட்டு
இருந்ததால் பெருத்த சேதம் தவிர்க்கப் பட்டது.
மீனாட்சி அம் மன் கோவிலில் உள்ள 4 ராஜ
கோபுரங்களில் கிழக்கு கோபுரம் மிகவும் பழமையானது. மாற வர்மன் சுந்தரபாண்டி
யன் என்ற அரசனால் கடந்த 1216-1238 ஆண்டுக் குள் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக
நம்பப் படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக