ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கொழும்பில் அதிசயம் நூறாண்டுகளுக்கு பின் அதே இடத்தில அதே நேரத்தில் தானாக ஓடிய ரயில் அதிர்ச்சி சம்பவம்

ரயில் என்ஜின் சாரதியின் உதவியின்றிசில தினங்களுக்கு முன்னர் ரயில் எஞ்சினொன்று தெமட்டகொடையிலிருந்து ரத்மலானை வரை பயணித்ததைப் போலவே, இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற சம்பவமொன்று நிகழ்ந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலொன்று வெளியாகி யுள்ளது. இந்தச் சம்பவம் நிகழ்ந்த அதே நாளில் அதாவது 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி அதிகாலை 1.45 இற்கு இடம்பெற்றிருப்பதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அன்று நடந்த சம்பவத்தை அப்போது (நூறு வருடங்களுக்கு முன்) தினமின பத்திரிகை முன்பக்கச் செய்தியாக வெளியிட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஒரே தினத்தில் ஒரே நேரத்தில் இடம் பெற்ற சம்பவம் குறித்து அதிர்ச்சியூட்டும் இந்தத் தகவல் புகையிரத சேவையைச் சேர்ந்த மூத்த ஊழியர்களால் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது. 1913 ஆம் ஆண்டு சம்பவமானது, மாளிகாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் எஞ்சின் ஒன்று தானாக இயங்கி களனிவெலி ரயில் பாதையில் மாளிகாவத்தை, மருதானை, நிலையங்களைக் கடந்து கொழும்பு கோட்டை திசை நோக்கி சுமார் மூன்றரை கிலோ மீற்றர் தூரம் பயணித்து கப்பிதாவத்தை இந்து ஆலயம் வரை வந்து தரித்திருக்கின்றது. இந்தச் சம்பவத்திலும் எந்த அனர்த்தமும் ஏற்படவில்லை.இதேபோல் கடந்த வாரம் சாரதி இல்லாமல் பிரயாணித்த புகைவண்டி சுமார் 15 கிலோ மீற்றர் வரை பயணித்திருக்கின்றது. அத்துடன் குறித்த ரயில் பாதையில் எந்தவொரு இரயிலும் வாராத காரணத்தினாலும் மக்கள் நடமாடாத காரணத்தினாலும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என்பதுடன் இரத்மலானை ரயில் நிலைய அதிகாரிகள் குறித்த ரயில் இயந்திரத் தொகுதியை நிறுத்தியதுடன் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.  இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல . பிரபஞ்ச பொறி முறை எப்படி இயங்குகிறது என்பதை மெதுவாக கோடி காட்டும் சம்பவமாகவே நமக்கு தோன்றுகிறது 

கருத்துகள் இல்லை: