புதுடெல்லி: ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க மத்திய அரசு முயற்சி
மேற்கொண்டுள்ளது. ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் என்று உச்ச நீதிமன்றம்
நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்புக்கு கட்சிகளும், சினிமா பிரபலங்களும்,
விஐபி.க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பற்றி மத்திய சட்ட அமைச்சர்
கபில் சிபல் நேற்று கூறுகையில், ‘’டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பையே
செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளும்.
ஓரினச்சேர்க்கையை குற்றமற்றது என நிச்சயம் மாற்றப்படும்’’ என்றார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ‘‘‘டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பே சரியானது. ஓரினச்சேர்க்கை என்பது கூட தனி மனித சுதந்திரம்தான்’’ என்றார்.நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பே சரியானது. இது தொடர்பாக, 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் விசாரிக்க மனுசெய்யப்படும்’’ என்றார்.
சோனியா அதிருப்தி:
காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று அளித்த பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் தனி மனித சுதந்திரத்துக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் ஐமு கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்கும். விரைவில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடத்தப்படும்’’ என்றார்.dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக