சென்னை தீவுத்திடல்
அருகில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வந்தவர் ராமராஜீ (58)
ராணுவத்தில் லெப்டினன்ட் கர்ணலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டின்
அருகே குடிசைப்பகுதி உள்ளது.
கடந்த 2011–ம் ஆண்டு இங்கு வசிக்கும் சிறுவர்கள் ராணுவ குடியிருப்பின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து பாதாங்கொட்டை பறித்தனர். அவர்களை விரட்ட ராமராஜீ துப்பாக்கியால் சுட்ட போது 11 வயது சிறுவன் தில்சன் மீது குண்டு பாய்ந்து பலியானான்.
அண்ணாசதுக்கம் போலீசார் ராணுவ அதிகாரி ராமராஜீவை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த விரைவு கோர்ட்டு ராமராஜீக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.
தீர்ப்பை எதிர்த்து ராமராஜீ ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். நீதிபதிகள் ராஜேஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் அப்பீல் மனுவை விசாரித்தனர். இன்று தீர்ப்பு கூறினர்.
அப்போது ராணுவ அதிகாரி ராமராஜீக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ராமராஜீ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது கொலை குற்றச்சாட்டு மற்றும் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் போன்றவர்களுக்காக கீழ் கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம் என்று தீர்ப்பில் தெரிவித்தனர்.
மேலும் ராமராஜீவை அடையாள அணி வகுப்புக்கு பிறகு மாஜிஸ்திரேட்டு முன்பு தான் போட்டோ எடுத்து சிறையில் அடைக்க வேண்டும், போலீசாரே போட்டோ எடுக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக