சென்னை: தேமுதிகவில் தாம் எடுப்பதே முடிவு.. பிடிக்காதவர்கள்
கட்சியைவிட்டு போகலாம் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். தேமுதிகவில் இருந்து அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் விலகிய நிலையில், அக்கட்சியின் அவசரச் செயற்குழு கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்பாக விஜயகாந்த் எதுவும் பேசவில்லை. ஆனால் தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ, கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், பார்த்தசாரதி எம்.எல்.ஏ. ஆகியோர் பண்ருட்டி ராமச்சந்திரனை பற்றி மிகவும் விமர்சித்துப் பேசியிருக்கின்றனர். என்னை நம்பியே கட்சி.. நான் எடுக்கிறதே முடிவு.. பிடிக்கலையா போகலாம்..: விஜயகாந்த் பின்னர் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், லோக்சபா தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே மகத்தான வெற்றிபெறும். தேமுதிகவில் இருந்து யார் போனாலும், எனக்குக் கவலை இல்லை. என்னை நம்பியே கட்சியைத் தொடங்கினேன். மக்களும் எனக்காகத்தான் வாக்களிக்கின்றனர். போகிறவர்கள் போகலாம்: கட்சி தொடர்பாக நான் எடுப்பதுதான் முடிவு. இதைப் பிடிக்காதவர்கள் கட்சியில் இருந்து போவதாக இருந்தால் போகலாம் என்றார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக